இந்தியாவின் முன்னணி தொழில் அதிபர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி தினமும் 20 மணி நேரம் வேலை செய்கிறார் என்றும், அவரது மகன் ஆகாஷ் அம்பானி 12 மணி நேரம் வேலை செய்கிறார் என்றும் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே அவர்களது குடும்பம் இந்தியாவின் முன்னணி பணக்கார குடும்பமாக இருக்கிறது.
சமீபத்தில் மும்பையில் நடந்த ஜியோ கன்பெக்ஷன் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆகாஷ் அம்பானி கலந்து கொண்டார். அப்போது, “எனக்கு மிகப்பெரிய ஊக்கமே எனது குடும்பம் தான். ஒரே வீட்டில் நாங்கள் ஒற்றுமையாக 32 ஆண்டுகளாக வாழ்கிறோம். எனது பெற்றோரிடமிருந்து தான் எனக்கு ஊக்கம் கிடைக்கிறது.
என் தந்தை முகேஷ் அம்பானி அர்ப்பணிப்புடன் பணியாற்றுகிறார். அவர் 40 ஆண்டுகளாக இந்த நிறுவனத்தை கவனித்து வருகிறார். அதிகாலை 2 மணி வரை அலுவலகத்திற்கு வரும் ஈமெயில்களை சரி பார்த்து பதில் அனுப்புவார். கிட்டத்தட்ட 20 மணி நேரம் அவர் உழைக்கிறார். நானும் 12 மணி நேரத்துக்கு மேலாக உழைக்கிறேன். எனது தாயார் எனக்கு மிகவும் ஆதரவாக இருக்கிறார். தற்போது எனது மனைவியும் எனக்கு ஆதரவாக இருக்கிறார்” என்று தெரிவித்தார்.
40 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் பிசினஸ் செய்து வரும் முகேஷ் அம்பானி குடும்பம் இந்த அளவுக்கு நம்பர் ஒன் இடத்தில் இருப்பதற்கு முக்கிய காரணம் அவர்களுடைய அயராத உழைப்புதான் என்பது இதன் மூலம் தெரிய வந்துள்ளது. முகேஷ் அம்பானி தினமும் 20 மணி நேரமும், அவரது மகன் ஆகாஷ் அம்பானி 12 மணி நேரமும் உழைப்பதால், இன்றும் அவர்கள் நம்பர் ஒன் இடத்தை இழக்காமல் உள்ளனர் என சமூக வலைதளங்களில் கருத்துகள் குவிந்து வருகின்றன.