தனுஷ் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தற்போது வளர்ந்து வரும் பிரபலமான இயக்குனராக இருக்கிறார். இவரது தந்தை கஸ்தூரிராஜா தமிழ் சினிமாவில் பணியாற்றிய இயக்குனர் மற்றும் இவரது சகோதரர் செல்வராகவன் தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் இருந்து வருகிறார்.
2002 ஆம் ஆண்டு துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார் தனுஷ். ஆரம்பத்தில் இவரது தோற்றத்திற்காக மிகவும் கேலி கிண்டலுக்கு உள்ளானார். ஆனால் அதையும் தாண்டி தற்போது பல வெற்றி திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருக்கிறார்.
இயக்குனராக தற்போது புது அவதாரம் எடுத்துள்ள தனுஷ் சமீபத்தில் ராயன் என்ற திரைப்படத்தை இயக்கினார். அது நூறு கோடி வசூலை பெற்றது. அதை தொடர்ந்து தற்போது நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற திரைப்படத்தை இயக்கி வெளியிட்டார். ஆனால் இது எதிர்பார்த்த அளவு போகவில்லை. அடுத்ததாக தனுஷ் இயக்கத்தில் இட்லி கடை திரைப்படம் ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆக இருக்கிறது.
இந்நிலையில் NEEK திரைப்படம் சறுக்கி விட்டதால் தனுஷ் எந்த ஒரு கவலையிலும் இல்லையாம். அவரது இட்லி கடை படத்தின் மீது அவருக்கு அதிக நம்பிக்கை இருப்பதால் அந்த படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என்று மிகுந்த தன்னம்பிக்கையுடன் இருந்து வருகிறார் தனுஷ் என்ற தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது.