விவாகரத்துக்கு முன்னர் குறைவான சம்பளம் பெற்ற நான், விவாகரத்துக்கு பிந்தைய காலக்கட்டத்தில் படிப்படியாக சம்பளம் உயர்ந்து, தற்போது ஆண்டுக்கு 8.7 கோடி சம்பாதிக்கிறேன் என முன்னாள் கூகுள் பெண் ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளது. இது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் வசிக்கும் முன்னாள் கூகுள் நிறுவனத்தின் தொழில்நுட்ப வல்லுநர் வாங்க் என்பவர் சமீபத்தில் ஒரு ஊடகத்திற்கு பேட்டி அளித்தார். அப்போது, கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்ய முடிவு செய்தபோது, என்னிடம் வெறும் பத்தாயிரம் டாலர் மட்டுமே இருந்தது. அப்போது தான் நான் எனது நிதி மேலாண்மையை சரியாக நிர்வகிக்கவில்லை என்பதை புரிந்துக்கொண்டேன்.
தன்னையும், தனது மகளையும் சிறப்பான எதிர்காலத்திற்கு அழைத்துச் செல்ல, கண்டிப்பாக மிகப் பெரிய சம்பளத்துடன் கூடிய வேலை மற்றும் சேமிப்பு இருக்க வேண்டும் என முடிவு செய்தேன். அதனால் தான், கூகுள் நிறுவனத்தில் பல்வேறு பணிகளை செய்த நான், ஏஐ நிறுவனத்துடன் இணைந்தேன். அதன் பிறகு, ஏஐ தொடர்பான பெரிய நிறுவனம் ஒன்றில் வேலைக்குச் சேர்ந்தேன்.
தற்போது, எனது ஆண்டு வருமானம் 8.77 கோடி. விவாகரத்துக்கு பின் என் வேலையில் முழு கவனம் செலுத்தி வருகிறேன். தற்போது எனக்கும், என் மகளுக்கும் நல்ல எதிர்காலத்திற்கான பொருளாதார நிலை உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
அவரது இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.