Bigg Boss Tamil Season 8 Day 100: வந்தது பணப்பெட்டி… புதிய ட்விஸ்ட்களுடன் விறுவிறுப்பன ஆட்டம்….

Bigg Boss Tamil Season 8 100 வது நாளை வெற்றிகரமாக எட்டிவிட்டது. போட்டி விறுவிறுப்பாக ஆகிக்கொண்டிருக்கிறது. இன்னும் ஒரு சில தினங்களில் இந்த பிக் பாஸ் சீசன் 8 முடிந்துவிடும். ஆனாலும் அனைவரும்…

bigg boss

Bigg Boss Tamil Season 8 100 வது நாளை வெற்றிகரமாக எட்டிவிட்டது. போட்டி விறுவிறுப்பாக ஆகிக்கொண்டிருக்கிறது. இன்னும் ஒரு சில தினங்களில் இந்த பிக் பாஸ் சீசன் 8 முடிந்துவிடும். ஆனாலும் அனைவரும் ஒவ்வொருவரையும் குற்றம் சாற்றிகொண்டும் சண்டையிட்டும் தான் இருக்கிறார்கள்.

bigg boss 3

அடுத்ததாக ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் இணைந்து பொங்கல் வைத்து கொண்டாடினார்கள். பட ப்ரோமோஷனுக்காக ராஜு மோகன் மற்றும் லாஸ்லியா பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தனர். அவர்களின் கொண்டாட்டங்கள் பார்ப்பதற்கு நன்றாக இருந்தது.

அடுத்ததாக அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்த பணப்பெட்டியும் வந்து விட்டது. இதுவரை எந்த சீசன்களிலும் இல்லாத அளவுக்கு பணப்பெட்டி புது டுவிஸ்ட்டோடு கொண்டு வந்திருக்கிறார் பிக் பாஸ். அதாவது இதற்கு முந்தைய சீசனங்களில் பெட்டியை எடுப்பவர்கள் அப்படியே எடுத்துவிட்டு வெளியே சென்றுவிடலாம். ஆனால் இந்த முறை பெட்டி எடுத்தவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் வீட்டுக்குள் ஓடி வந்து விட்டால் அவர்கள் போட்டியில் தொடரலாம் என்று அறிவித்தார்.

bigg boss 4

அதன்படி முதலாவதாக 50000 பணப்பெட்டியை வைத்து 35 செகண்டுக்குள் 30 மீட்டரை கடக்க வேண்டும் என்று அறிவித்திருந்தார். முத்துக்குமரன் சென்று அந்த டாஸ்கை வெற்றிகரமாக முடித்து விட்டார். அவர் போய் பணப்பெட்டியை எடுத்து வந்து சேர்வதற்குள் மிகவும் படபடப்பாக அனைவரும் ஆகிவிட்டது. இது பார்ப்பதற்கு விறுவிறுப்பாக இருந்தது. அடுத்ததாக ரயான் 2 லட்சம் ரூபாய் பணத்தை 45 செகண்டுகள் எடுத்து வந்துவிட்டார் போல் தெரிகிறது. இன்னும் இது எந்த அளவு வரை செல்லும் யார் இறுதியாக பணப்பெட்டி எடுத்து வெளியேறுவார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.