Bigg Boss Tamil Season 8 Day 99: இறுதி வாரத்திலும் சண்டையிட்டு கொண்ட ஹவுஸ்மேட்ஸ்… விஷால்- தர்ஷிகா விஷயத்தில் கிடைத்த தீர்வு…

Bigg Boss Tamil Season 8 Day 99 இல் இந்த வாரம் மீதி இருக்கும் முன்னாள் போட்டியாளர்கள் ஒவ்வொருவராக வீட்டுக்குள் வர ஆரம்பித்தனர். முதலில் சத்யா ஜெஃப்ரி வந்தனர். அதற்கு அடுத்ததாக தார்ஷிகா…

bigg boss

Bigg Boss Tamil Season 8 Day 99 இல் இந்த வாரம் மீதி இருக்கும் முன்னாள் போட்டியாளர்கள் ஒவ்வொருவராக வீட்டுக்குள் வர ஆரம்பித்தனர். முதலில் சத்யா ஜெஃப்ரி வந்தனர். அதற்கு அடுத்ததாக தார்ஷிகா வந்தார். அவர் வந்ததை பார்த்ததும் விஷாலுக்கு சற்று ஒரு மாதிரி ஆகிவிட்டது. அதற்கு அடுத்ததாக ஆங்காங்கே சௌந்தர்யாக்கும் சுனிதாவுக்கும் சண்டை ஏற்பட்டு கொண்டே இருந்தது.

bb 3

லிவிங் ரூமில் ஒரு டாஸ்க் கொடுக்கும் போது கூட PR பத்தி பேசியதால் சௌந்தர்யா சுனிதாவிடம் கேட்டார். அதற்கு சுனிதாவும் பதிலுக்கு சண்டையிடுவது போல் தான் பேசினார். அடுத்ததாக ரவீந்தர் தர்ஷிகாவை நீ இன்டர்வியூ கொடுத்ததால் தான் விஷால் இங்க ஒவ்வொருத்தர்கிட்டயும் அடி வாங்கிட்டு இருக்கான் என்று கேட்கும் போது அங்கு ஒரு சண்டை ஏற்பட்டது. ப்படி கடைசி வாரம் என்று பாராமல் ஜாலியாக இருக்காமல் ஒருவரை ஒருவர் சண்டையிட்டு கொண்டிருந்தார்கள்.

அடுத்ததாக தர்ஷிகா விஷால் பிரச்சினைக்கு நேரடியாக பேச வேண்டும் என்று இருவரும் தனியாக இருந்து பேசினார். அப்போது தர்ஷிகா வெளியில் எல்லாரும் என்ன நினைத்தார்களோ அதையே விஷால் இடம் கூறிவிட்டார். நீ பண்ணுனது எனக்கு இப்படித்தான் இருந்துச்சு நீ மத்தவங்க கிட்ட நீ பண்ணல அப்படி இல்லன்னு சொல்லலாம் ஆனா என்கிட்ட சொல்ல முடியாது. நீ வந்து எல்லார்கிட்டயும் நான் வந்து ஸ்பேஸ் கொடுத்துட்டேன் அப்படின்னு சொல்ற அது கிடையாது நான் உன்னை பிடிச்சிருக்கு அப்படின்னு சொல்லி நான் ஸ்பேஸ் கொடுக்கிறேன் அதை நீ வந்து எடுத்துக்கிட்டு ரியாக்ட் பண்ணது எனக்கு Hope தான் கொடுத்தது.

இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கு. நான் நீ ஏன் பண்ணினனு கேட்கிறதுக்கு விரும்பல. நடந்தது இதுதான் அப்படின்னு சொல்றேன் என்று கூறினார் தர்ஷிகா. விஷாலுக்கு பதில் சொல்லவே முடியவில்லை, ஆனால் நடந்தது இதுதான் இந்த விஷயத்தில் தர்ஷிகா பேசியது அனைவருக்கும் பிடித்தது. மேலும் தர்ஷிகா நீ வந்து நான் அந்த மாதிரி நடந்துக்கும்போது நீ கம்ப்ளீட்டா விலகிப் போய் இருக்கணும் அப்படினா அது கரெக்டா இருந்திருக்ககும். ஆனா நீ வாயால தான் சொன்னியே தவிர உன்னோட செயல்கள் அப்படி இல்ல. எனக்கே ஒரு சில இடத்துல நிறைய சந்தேகம் வந்தது நீ வெளிய மத்தவங்க கிட்ட நீ பேசுவதை கேட்கும் போது எனக்கு ரொம்ப கஷ்டமாயிருச்சு.

bb 2 1

எங்க அம்மாவும் என்னால சமாளிக்கவே முடியல. வெளியே என்ன நடக்கும்னு யோசித்து பார்த்தியா? நானே முதல்ல இங்க உள்ள இருந்ததனால இந்த சிட்டுவேஷன்ல எங்க அம்மா பத்தி யோசிக்காம விட்டுட்டேன். ஆனால் இதுதான் நடந்தது என்று பேசி முடிவுக்கு வந்து விட்டார்கள். இறுதியாக தர்ஷிகா அம்மாவுடை மோதிரத்தை விஷாலிடம் கொடுத்திருந்தார் அதை திருப்பி கேட்டுவிட்டார். இதோடு இந்த பிரச்சனைக்கும் தீர்வு கிடைத்துவிட்டது யாரும் அதற்கு பிறகு பேசவில்லை. இன்னும் சில நாட்களே இருக்கிறது. அடுத்ததாக பணப்பெட்டி வைப்பார்கள் என்பது தெரிகிறது என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.