Bigg Boss Tamil Season 8 : இவங்கதான் டைட்டில் வின்னர்.. ராணவின் சாமர்த்தியமான கணிப்பு.. காரணம் இதுதான்..

பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழில் 8 வது சீசன் நடைபெற்று வரும் நிலையில், 100 நாட்களை எட்டிவிட்டது. இன்னும் ஒரு வாரத்தில் பிக் பாஸ் பைனல் நடைபெற உள்ள நிலையில், இதுவரையும் 24 போட்டியாளர்களில்…

Raanav about BB 8 Title Winner

பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழில் 8 வது சீசன் நடைபெற்று வரும் நிலையில், 100 நாட்களை எட்டிவிட்டது. இன்னும் ஒரு வாரத்தில் பிக் பாஸ் பைனல் நடைபெற உள்ள நிலையில், இதுவரையும் 24 போட்டியாளர்களில் இருந்து முத்து, பவித்ரா, விஜே விஷால், சவுந்தர்யா, ஜாக்குலின் மற்றும் ரயான் என 6 பேர் உள்ளனர். இதில் யார் ஃபைனல் வரை தகுதி பெறுவார்கள், யார் அதற்கு முன் வெளியேற போகிறார்கள் என்பதே பெரிய புதிராக தான் உள்ளது.

இதற்கு காரணம், பைனல் முன்னேறுவார் என கருதப்பட்ட தீபக், கடைசி ஆளாக வெளியேறி இருந்த நிலையில், பார்வையாளர்கள் பலரும் இந்த முடிவால் அதிர்ச்சி அடைந்திருந்தனர். இதனால், பிக் பாஸ் நிகழ்ச்சியின் கடைசி ஒரு வாரத்திற்குள் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதும் பார்வையாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

கடைசி நேரத்துலயும் குழப்பம்

அப்படி ஒரு சூழலில், ஏற்கனவே வெளியேறிய போட்டியாளர்கள் பலரும் தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். இவர்கள் உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் ஃபைனல் முன்னேறுவதற்கு சிறப்பாக ஊக்கப்படுத்துவார் என பார்த்தால் மாறி மாறி சண்டை போட்ட வண்ணம் உள்ளனர்.

இதில் பைனல் முன்னேற உத்வேகத்துடன் ஆடி வரும் பலரையும் உடைத்து அவர்களது நம்பிக்கையை நொறுக்கும் வேலையிலும் சில எக்ஸ் போட்டியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாகவே பல குழப்பங்கள் இறுதி கட்டத்தை நெருங்கும் நேரத்திலும் நடைபெற்று வர, ஒவ்வொரு மணி நேரமும் கூட அதிரடியாக தான் சென்ற வண்ணம் உள்ளது. அப்படி ஒரு சூழலில், வைல்டு கார்டு மூலம் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்து தனது பிராங்க் மூலம் கவனம் ஈர்த்தவர் தான் ராணவ்.

முத்து தான் ஜெயிப்பாரு..

இவர் ஆரம்பத்தில் பெரிய அளவில் பெயரை எடுக்காமல் இருக்க, பின்னர் மெல்ல மெல்ல மற்ற போட்டியாளர்களுக்கு எதிராக யுக்தியுடன் ஆட்டத்தை மேற்கொண்டிருந்தார். ஆனாலும், அவரது காயம் உள்ளிட்ட விஷயங்கள் ராணவிற்கு எதிராக மாற, அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் ஆகியிருந்தார்.
Raanav and Muthu

இதனைத் தொடர்ந்து பல நேர்காணல்களிலும் பங்கெடுத்து பிக் பாஸ் குறித்து நிறைய விஷயங்களை பற்றி பகிர்ந்து வருகிறார் ராணவ். அப்போது அவரிடம் 8 வது பிக் பாஸ் சீசன் டைட்டில் வின்னர் ஆவதற்கு யாருக்கு அதிகம் வாய்ப்புள்ளது என்ற கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் சொன்ன ராணவ், “முத்து தான் என நினைக்கிறேன். நான் பிக் பாஸ் வீட்டிற்கு போவதற்கு முன்பாகவே முத்துவின் கேம் வித்தியாசமான பார்வையில் இருந்தது. இதனால், அப்போதே முத்துவின் ஆட்டம் எனக்கு மிகவும் பிடிக்கும்” என ராணவ் கூறியிருந்தார்.