கோவை: பொங்கலுக்கு பொருட்கள் வாங்க போன பொதுமக்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் பருப்புகள் விலை அதிரடியாக சரிந்துள்ளது. இதனால்பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
பொதுவாக பொங்கல் பண்டிகையின் போது பருப்புகள் விலை அதிகமாகும். ஆனால் இந்த முறை பெரிய அளவில் சரிந்துள்ளது. குறிப்பாக துவரம் பருப்பு விலை கிலோவிற்கு 30 வரை குறைந்துள்ளது. அதேபோல் உளுந்து விலையும் கிலோவிற்கு 15 ரூபாய் வரை குறைந்துள்ளது. சமையல் எண்ணெய்
கோவையில் மொத்த விலைக் கடைகளில் பருப்புகள் விலை நிலவரம் பற்றி பார்ப்போம். பச்சை பட்டாணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிலோ ரூ.120-வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது கிலோ ரூ.210 ஆக உயர்ந்துள்ளது. வடை பருப்பு கிலோ ரூ.70-ல் இருந்து ரூ.45 ஆக குறைந்திருக்கிறது. கோதுமை கிலோ ரூ.37 ஆக இருந்தது. தற்போது ரூ.41 ஆக உயர்ந்துள்ளது. இதனால் கோதுமை மாவின் விலையும் கிலோ ரூ.40 ஆக உயர்ந்துள்ளது.
கிலோ ரூ.190-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த துவரம் பருப்பு, தற்போது கிலோவுக்கு ரூ.30 குறைந்து ரூ.160-க்கு விற்பனையாகிறது. வத்தல் கிலோ ரூ.170-ல் இருந்து ரூ.145 ஆக குறைந்துள்ளது. உளுந்து கிலோ ரூ.130-ல் இருந்து ரூ.115 ஆக குறைந்துள்ளது. கடலை பருப்பு ரூ.105-ல் இருந்து ரூ.10 குறைந்து ரூ.95-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்க்கரை விலை ரூ.39.50 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
மல்லி 40 கிலோ கொண்ட மூட்டை ரூ.4,500 ஆக உள்ளது. மற்ற பொருட்களில் மாற்றம் இல்லை. வத்தல் மற்றும் பருப்பு வகை பொருட்கள் விலை குறைந்து இருப்பதால் பொங்கல் பண்டிகைக்கு பொருட்கள் வாங்குபவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சமையல் எண்ணெய் விலையில், கடலை எண்ணெய் லிட்டர் ரூ.200 ஆகவும், நல்லெண்ணெய் லிட்டர் ரூ.390 ஆகவும், தேங்காய் எண்ணெய் லிட்டர் ரூ.260 ஆகவும் விற்பனையாகிறது.