பிரபல எழுத்தாளரும், நடிருகமான வேல.ராமமூர்த்தி மதுரை அவனியாபுரத்தில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். மதயானைக்கூட்டம் படத்தின் மூலமாக பிரபலமான எழுத்தாளரான வேல. ராமமூர்த்தி ராணுவத்தில் பணிபுரிந்தவர். ராணுவத்தில் இருந்து வந்து இலக்கியத்தின் மீது கொண்ட ஆர்வத்தால் எழுத்தாளராக தனது பணியைத் தொடர்ந்தார்.
குற்றப்பரம்பரை, குருதி ஆட்டம், பட்டத்து யானை, வேல.ராமுர்த்தி சிறுகதைகள் போன்றவற்றைவற்றை எழுதிய வேல.ராமமூர்த்தி தற்போது பிஸியான நடிகரான வலம் வருகிறார். மேலும் சன் டி.வி-யில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடரில் ஆதி குணசேகரனாக மாரிமுத்துவுக்குப் பதிலாக இவர் நடித்து வருகிறார்.
இந்நிலையில் மதுரை அவனியாபுரத்தில் உள்ள அவரது வீட்டின் அருகில் உலகப்புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்காக வாடிவாசல் தடுப்பு மேடை மற்றும்பார்வையாளர் மேடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த மேடையானது வேல.ராமமூர்த்தியின் வீட்டின் முன்புறம் வெளியே செல்ல முடியாதவாறு அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் வேல.ராமமூர்த்தியின் மனைவி கோபமடைந்தார்.
பைபிள் வசனத்துடன் மதுரையில் அஜீத்துக்கு வாழ்த்து..வைரலாகும் போஸ்டர்..
இதனால் பந்தல் அமைப்பாளர்களிடமும், மாநகராட்சி ஊழியர்களிடமும் மேடையை வழிவிட்டு கட்டுமாறு வாக்குவாதம் செய்தார். இதனைத் தொடர்ந்து ஒருகட்டத்தில் வீட்டிலிருந்து அரிவாளை எடுத்து வந்து அவரது வீட்டின் முன்பு கட்டப்பட்ட மேடைக் கயிற்றை அரிவாளால் வெட்டினார்.
இதனால் அருகிலிருந்து காவலர்கள், மாநகராட்சி ஊழியர்கள் உள்ளிட்டோர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் ஒரு தடுப்பினை மட்டும் அகற்றுமாறும், மாலையில் மீண்டும் கட்டிக் கொள்ளுமாறும் அவர் தெரிவித்தார். ஆனால் அவரது வீட்டை மறித்து மேடை அமைக்கப்பட்டிருந்தது. போலீசார் இன்றொரு நாள் பொறுத்துக் கொள்ளுமாறு வேண்டியும், வெட்டினால் வழக்கு தொடரப்படும் எனவும் எச்சரித்தனர்.