ஐந்தாவது முறையாக மீண்டும் வெற்றிமாறனுடன் இணையும் தனுஷ்..

விடுதலை பாகம் -2 படத்தின் வெற்றியைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கும் அடுத்த படத்தில் மீண்டும் இணைகிறார் தனுஷ். இயக்குநர் வெற்றிமாறன் முதன் முதலாக தனுஷுடன் பொல்லாதவன் படத்தில் இணைந்தார். இப்படம் இருவருக்குமே திருப்புமுனையைக் கொடுத்தது.…

Dhanush Vetrimaaran

விடுதலை பாகம் -2 படத்தின் வெற்றியைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கும் அடுத்த படத்தில் மீண்டும் இணைகிறார் தனுஷ். இயக்குநர் வெற்றிமாறன் முதன் முதலாக தனுஷுடன் பொல்லாதவன் படத்தில் இணைந்தார். இப்படம் இருவருக்குமே திருப்புமுனையைக் கொடுத்தது. இதனைத் தொடர்ந்து மீண்டும் இவர்கள் கூட்டணியில் வெளிவந்த ஆடுகளம் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்தது. மேலும் இப்படம் நான்கு தேசிய விருதினையும் பெற்றுக் கொடுத்தது.

வெற்றிமாறனின் மேக்கிங், தனுஷின் ஆக்டிங் என இவர்கள் காம்போ ரசிகர்களுக்கும், சினிமா துறைக்கும் புது அனுபவமாக இருந்தது. குறிப்பாக ஆடுகளம் படத்தில் எந்த பந்தாவும் இல்லாமல் கடைசிவரை வெறும் லுங்கியுடன் தனுஷ் நடித்திருந்தது நல்ல வரவேற்பினைப் பெற்றது. சேவல் சண்டையை மையப்படுத்தி இதுவரை எந்த சினிமாவும் எடுத்தது கிடையாது என்பதால் இப்படம் வெற்றியைத் தாண்டி தமிழ் சினிமாவின் சிறந்த படங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது.

அஜீத்துக்குக் குவியும் வாழ்த்து.. ஜெயிச்சிட்டோம் மாறா..! ரியல் பொங்கல் விருந்து இதான்…

இதனைத் தொடர்நது வெற்றிமாறன் விசாரணை படத்தினை இயக்க, மீண்டும் வட சென்னை படத்தில் தனுஷுடன் இணைந்தார். வட சென்னை படமும் வெற்றி பெற்றது. மேலும் வடசென்னை-2 பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நான்காவது முறையாக அசுரன் படத்தில் இந்தக் கூட்டணி இணைந்தது. இப்படமும் தேசிய விருது பெற, தனுஷுக்கு வெற்றிமாறன் படங்கள் அனைத்துமே பிளாக் பஸ்டர் ஹிட் கொடுக்க, ஹாலிவுட் சினிமாவில் நடிக்கும் அளவிற்கு புகழ்பெற்றார் தனுஷ்.

இதனைத் தொடர்ந்து இந்திய சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் வெற்றிமாறன் கவனம் ஈர்த்தார். அசுரன் படத்தினை அடுத்து விடுதலை படத்தினை இயக்கினார் வெற்றிமாறன். புரோட்டா சூரியை விடுதலை சூரி என்னும் அளவிற்கு நடிப்பில் மெருகேற்றி அவரையும் செதுக்கினார் வெற்றிமாறன். விடுதலை பாகம்-2 முழுக்க விஜய்சேதுபதி கம்யூனிசம் பேசி நடித்த நிலையில் தற்போது திரையரங்குகளில் 25 நாட்களைக் கடந்துள்ளது.

இந்நிலையில் வெற்றிமாறன் அடுத்ததாக சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தினை இயக்கி வருகிறார். இதனையடுத்து தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணி அடுத்த புதிய படம் ஒன்றில் இணைய உள்ளது. இதற்கான முறையான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. எனினும் தனுஷ் வெற்றி மாறன் கூட்டணி கண்டிப்பாக அடுத்து ஓர் பிளாக் பஸ்டர் கொடுக்கும் என்பதால் ரசிர்கள் இப்போதே ஆர்வமாகி உள்ளனர். இதுவரை வெற்றிமாறன் இயக்கிய அனைத்துப் படங்களுமே சூப்பர் ஹிட் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தனுஷுடன் 5-வது முறையாக வெற்றிமாறன் இணைய உள்ளதால் ரசிகர்கள் படத்தின் அப்டேட் குறித்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இப்படத்தினை ஆர்.எஸ். இன்போடெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.