Bigg Boss Tamil Season 8 : டிராபி உடைச்சு கிளம்ப தயாரான தீபக்கிற்கு பிக் பாஸ் கொடுத்த விருது.. கண்ணீர் விட்ட முத்து..

Deepak Elimination : பிக் பாஸ் வீட்டில் சமீபத்தில் நடந்த எலிமினேஷன் நிச்சயமாக பார்வையாளர்கள் கூட எதிர்பார்க்காத ஒன்று தான். ஃபைனல் வரை சென்று டைட்டில் வின்னர் ஆவதற்கும் தகுதி உள்ள ஒருவர் என…

Deepak Best Captain

Deepak Elimination : பிக் பாஸ் வீட்டில் சமீபத்தில் நடந்த எலிமினேஷன் நிச்சயமாக பார்வையாளர்கள் கூட எதிர்பார்க்காத ஒன்று தான். ஃபைனல் வரை சென்று டைட்டில் வின்னர் ஆவதற்கும் தகுதி உள்ள ஒருவர் என கருதப்பட்ட போட்டியாளர் தான் தீபக். மற்ற பல போட்டியாளர்கள் PR மூலம் சமூக வலைத்தளங்களில் தங்களை பற்றி நிறைய பதிவுகளை போட்டு கவனம் ஈர்த்து வந்தனர். ஆனால், தீபக்கோ பிக் பாஸ் வீட்டில் தனது ஆட்டம் மற்றும் மக்களின் வாக்கை நம்பி இயங்கி வந்தார்.

கடந்த 95 நாட்களுக்கும் மேலாக மக்கள் மற்றும் சக போட்டியாளர்களால் அதிகம் வெறுக்கப்படாத ஒருவராக இருந்த தீபக், கடந்த சில வாரங்களாக தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். அப்படி இருந்தும் எப்படி அவர் சமீபத்தில் எலிமினேட் ஆனார் என்பதே பலருக்கும் புரியவில்லை. அதிலும் இத்தனை நாட்கள் தீபக்குடன் அதிக நேரம் செலவிட்ட முத்து, கண்ணீர் வடித்து புலம்பி இருந்தார்.

தீபக் எலிமினேஷன் 

இதனிடையே, முதல் நாள் தனக்கு கிடைத்த டிராபியை உடைக்கும் போது பேசிய தீபக், தனது மகனை குறிப்பிட்டு, “அக்னித், என்னை மன்னிச்சுடு” என உருக்கமாக கூறுகிறார். அப்போது தீபக்கிடம் பேசும் பிக் பாஸ், “இப்போது யாருமே உங்களிடம் இருந்து எடுக்க முடியாத டிராபி ஒன்றை நான் தருகிறேன். அதை நீங்களே நினைத்தாலும் எடுக்க முடியாது” எனக்கூறி விட்டு, தீபக்கின் கேப்டன்சி கிரீடத்தை எடுத்து வரும்படி முத்துவிடமும் பிக் பாஸ் சொல்கிறார்.
Deepak Eviction

“நேர்மையா பயமில்லாம, முடிவு என்னவா இருந்தாலும் பரவாயில்லை என உங்களை நம்பி இந்த போட்டியில் களமிறங்கி தீபக்கின் ஒரு புதிய பரிமாணத்தை காண்பித்திருக்கிறீர்கள். 7 சீசன்களாக கேப்டன்கள் ஒரு பக்கம், தீபக்கின் கேப்டன்சி ஒரு பக்கம் என இனிவரும் போட்டியாளர்களுக்கு ஒரு கேப்டன் எப்படி இருக்க வேண்டும், கேப்டனுக்கு என்னென்ன வேணும் என்பதை நீங்கள் காண்பித்திருக்கிறீர்கள்.

பிக் பாஸ் கொடுத்த பட்டம்

இதுவரை நடந்த அனைத்து பிக் பாஸ் சீசன்களிலும் வந்த சிறந்த கேப்டன் நீங்கள் என சொல்லி உங்களுக்கு முடி சூட்டி அழகு பார்க்கிறேன்” எனக்கூற முத்துக்குமரன் கண்ணீருடன் அந்த கிரீடத்தை தீபக்கிற்கு வைத்து விடுகிறார். இதன் பின்னர் பேசும் பிக்பாஸ், “நான் கண்ட கூலான ஹவுஸ்மேட்ஸ் நீங்கள். உங்களை புதுப்பித்துக் கொள்ள வாழ்த்துக்கள். அக்னித் உங்கள் அப்பா சூப்பர்ஸ்டார்” என கூறுகிறார்.
Captaincy Crown to Deepak

இதனை கேட்டதும் நன்றிகள் சொல்லும் தீபக், கண்ணீர் விட்டதும் அருகில் இருந்த அனைவரும் கைதட்டி ஆர்பரிக்கின்றனர்.