ராப் இசைப் பாடல்களில் கடந்த சில ஆண்டுகளாக கவனம் ஈர்த்தவர்தான் தெருக்குரல் அறிவு. தெருக்குரல் என்ற ஆல்பத்தின் மூலமாகப் பிரபலம் ஆனார். அதனைத் தொடர்ந்து கடந்த 2021-ல் வெளியான என்சாயி… என்சாமி.. பாடல் இவரை உலகம் முழுக்க பிரபலம் ஆக்கியது.
நீண்ட நாட்களாக இப்பாடல் யூடியூபில் டிரெண்டிங்கில் இருந்து வந்தது. இதனைத் தொடர்ந்து சினிமா துறைக்குள் நுழைந்த தெருக்குரல் அறிவு பா. ரஞ்சித்தின் காலா உள்ளிட்ட படங்களில் பாடினார். மேலும் சமீபத்தில் வெளியாகி இன்னும் வைரல் பாடலாக வலம் வரும் கோல்டன் ஸ்பேரோ பாடலும் இவர் பாடியதே.
கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக வள்ளியம்மா பேராண்டி என்ற பெயரில் தனது அடுத்த ஆல்பத்தினையும் வெளியிட்டார். இந்நிகழ்வில் பா.ரஞ்சித் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் தெருக்குரல் அறிவு தனது நீண்ட நாள் காதலியான கல்பனாவை இன்று திருமணம் செய்தார்.
போக்குவரத்துத் துறை ஊழியர்களுக்கு பொங்கல் சாதனை ஊக்கத் தொகை.. தமிழக அரசு அறிவிப்பு
சென்னை அம்பேத்கர் மணிமண்டபத்தில் இவர்களது திருமணம் நடைபெற்றது. இவர்கள் திருமணத்திற்கு இசைஞானி இளையராஜா, தொல்.திருமாவளவன் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
அண்மையில் இளையராஜாவைச் சந்தித்த தெருக்குரல் அறிவு அவரிடம் தனது பாடல் ஒன்றைப் பாடிக் காட்டி வாழ்த்துப் பெற்றார். இவர்களது திருமணப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.