இன்ஸ்டா பதிவுக்கு லைக்.. வாழ்க்கையே திருப்பி போட்ட காதல் கதை.. ரீல்ஸ் மோகம் இப்டி கூட பண்ணுமா..

வயது, சாதி உள்ளிட்ட பல விஷயங்கள் தாண்டி அன்பை மட்டுமே அடிப்படையாக கொண்டு ஒருவர் மீது காதல் வருவதற்கு ஏராளமான வழிகள் உள்ளது. நமக்கு பல ஆண்டுகளாக தெரிந்த ஒருவராக இருந்தாலும் அல்லது திடீரென…

Cute Love Story

வயது, சாதி உள்ளிட்ட பல விஷயங்கள் தாண்டி அன்பை மட்டுமே அடிப்படையாக கொண்டு ஒருவர் மீது காதல் வருவதற்கு ஏராளமான வழிகள் உள்ளது. நமக்கு பல ஆண்டுகளாக தெரிந்த ஒருவராக இருந்தாலும் அல்லது திடீரென சமீபத்தில் பழகி இருந்தாலும் எதிர்பாராத நேரத்தில் அவர் மீது காதல் உருவாவதற்கான வாய்ப்புகளும் அதிகமாக உள்ளது. நிச்சயம் இவருடன் நாம் சேர்ந்து வாழப்போவதே இல்லை என நினைக்கும் நபர்கள் மீது கூட காதல் வயப்பட்டு வாழ்க்கை இறுதி வரையிலும் அவருடன் வாழ்வதற்கான வழிகளையும் பலரும் மேற்கொள்வார்கள்.

இப்படி காதல் என்பது பல நேரங்களில் எதிர்பாராத ஒரு விஷயமாக அமைந்து வரும் சூழலில் சமீபத்தில் ஒரு பெண் தனது காதல் பயணம் பற்றி தெரிவித்த கருத்துக்களும் அந்த வகையில் தான் அமைந்துள்ளது. இது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் வைரலாகி வரும் ஒரு வீடியோவின் படி குஞ்ஜன் சைனி என்ற பெண் ஒருவர் அபிநீத் சிங் என்ற இளைஞருடன் காதலில் விழுந்துள்ளார். ஆனால் இவர்களது காதல் ஆரம்பமான இடம் தான் அனைவருக்குமே ஒரு சர்ப்ரைஸாக அமைந்துள்ளது.

ரீல்ஸில் மலர்ந்த காதல்

இது தொடர்பாக ஒரு வீடியோவில் பேசும் குஞ்ஜன் சைனி என்ற பெண், “கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நான் இன்ஸ்டாகிராமில் ரிலீஸ் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது க்யூட்டான இளைஞர் ஒருவர் சூப்பராக பாடல் ஒன்றை பாடிய வீடியோவை கவனித்தேன். அந்த பாடலை தோன்றும் நேரத்தில் கேட்டு விட்டு பின் அப்படியே விட்டுவிட்டேன். இதனைத் தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு மே மாதம் நான் Save செய்து வைத்த பதிவை மீண்டும் ஒருமுறை பார்த்த போது அந்த இளைஞரின் பாடல் வீடியோவை கவனித்தேன்.

இந்த முறை சற்று வித்தியாசமான உணர்வை கொடுத்ததால் அந்த இளைஞரின் புகைப்படங்கள் அனைத்தையும் ஃப்ரொபைலுக்குள் சென்று பார்க்க வேண்டும் என்று நினைத்தேன். மிகவும் சிரித்துக் கொண்டே போகன் வில்லாவை விரும்பும் ஒரு இளைஞராக முகத்திலும் குழி எல்லாம் இருக்க எந்த பெண்ணுக்கு தான் இப்படி ஒரு இளைஞர் மீது காதலில் விழ வேண்டும் என்று ஆசை வராது.

திருமணத்தில் முடிந்த லைக்

அப்படி ஒரு ரீலை லைக் செய்து தொடங்கிய பயணம், காதலாக மாறி திருமணத்தில் முடிந்துள்ளது” என அந்த பெண் பேசுகிறார். சமீபத்தில் குஞ்ஜன் சைனி மற்றும் அபிநீத் சிங் ஆகியோரின் திருமணமும் நடந்து முடிந்துள்ளது. இன்று நாம் நாள்தோறும் சமூக வலைத்தளங்களில் ஏராளமான வீடியோக்களை லைக் செய்தும், சேவ் செய்தும் வரும் நிலையில் அதன் மூலம் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு பெண்ணுக்கு காதல் மலர்ந்து அது திருமணத்திலும் சமீபத்தில் முடிந்துள்ளது, அனைவரையுமே அதிசயித்து பார்க்க. வைத்துள்ளது.
Love Marriage

ஒரு பக்கம் இந்த ஜோடிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் இன்னொரு புறம் ஆயிரம் ரீல்ஸ் பார்த்தாலும் நமக்கெல்லாம் இப்படி அமைய மாட்டேங்குதே என சிங்கிள்களும் ஏக்கமாக கருத்துக்களை குறிப்பிட்டு வருகின்றனர்.