Bigg Boss Tamil Season 8 : கண்ணீர் விட்டு புலம்பிய வர்ஷினி.. ஆனாலும் வெச்சு செஞ்ச சவுந்தர்யா ரசிகர்கள்.. பின்னணி என்ன?

பிக் பாஸ் வீட்டில் தற்போது எட்டு போட்டியாளர்கள் இருக்கும் சூழலில் வெளியே இருந்து ஏற்கனவே எட்டு பேரும் மீண்டும் விருந்தினர்கள் போல நுழைந்திருந்தனர். இவர்கள் வீட்டில் ஃபைனலுக்கு முன்னேறும் நோக்கத்தில் இருக்கும் பல போட்டியாளர்களின்…

Varshini crying Soundarya fans reaction

பிக் பாஸ் வீட்டில் தற்போது எட்டு போட்டியாளர்கள் இருக்கும் சூழலில் வெளியே இருந்து ஏற்கனவே எட்டு பேரும் மீண்டும் விருந்தினர்கள் போல நுழைந்திருந்தனர். இவர்கள் வீட்டில் பைனலுக்கு முன்னேறும் நோக்கத்தில் இருக்கும் பல போட்டியாளர்களின் எண்ணத்தை சீர்குலைக்கும் வகையில் தங்களது கேமையும் ஆடி வருவதால் பிக்பாஸ் வீடு தற்போது மிக பரபரப்பாக இருந்து வருகிறது.

வந்த வேகத்தில் பேட்மேன் ரவிந்தர், வர்ஷினி, ரியா உள்ளிட்ட பலரும் முத்துக்குமரனின் ஆட்டத்தை அதிகம் பாராட்டி தங்களது கருத்துக்களை வெளியிட்டிருந்தனர். இன்னொரு புறம் வெளியே நடப்பதை உள்ளே தெரிவிக்க கூடாது என பிக் பாஸ் எச்சரித்திருந்தும் மீண்டும் விருந்தினர்களாக வந்த பழைய போட்டியாளர்கள் வெளியே யாருக்கு அதிகம் வாக்கு உள்ளது, பிஆர் யாருக்கெல்லாம் வேலை செய்கிறார்கள் என்பது தொடர்பான தகவல்களையும் பிக் பாஸ் வீட்டிற்குள் பகிர்ந்து கொண்டனர்.

சவுந்தர்யா மேல டார்கெட்

இதனால் அவர்கள் அனைவரையும் அழைத்து கடுமையாக எச்சரித்திருந்தார் பிக் பாஸ். இதற்கு மத்தியில் தான் வர்ஷினி, ரியா, சுனிதா உள்ளிட்ட பலரால் கண்ணீர் விட்டு கதறியிருந்தார் சௌந்தர்யா. இவர்கள் அனைவருமே சௌந்தர்யாவின் ஆட்டத்தை குலைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவரை டார்கெட் செய்து பலவிதமான கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.

95 நாட்களாக பிக் பாஸ் வீட்டில் இருந்தாலும் அவர் தனது முகபாவனைகள் மற்றும் கியூட் ரியாக்சன் மூலம் தான் இருந்தார் என்றும் ழுங்காக அவரால் விளையாட தெரியவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தனர். அது மட்டுமல்லாமல் வர்ஷினி இன்னொரு படி மேலே போய் சௌந்தர்யாவிடம் நீங்கள் வேண்டுமென்று தான் மக்களின் வாக்குக்காக கேமராவை பார்த்து கண்ணீர் விடுகிறீர்கள் என்று கூற இது அவரை இன்னும் வேதனையில் ஆழ்த்தியது.
Varshini cry

தனியாக இருந்து கண்ணீர் விட்டுக் கொண்டிருந்த சௌந்தர்யாவை பார்த்து பேசும் வர்ஷினி, ‘மக்களே உங்களது வாக்குக்காக தான் இப்படி எல்லாம் சௌந்தர்யா செய்கிறார். இதுதான் அவரது ஆட்டத்திறன். தயவுசெய்து இந்த கண்ணீருக்காக ஏமாந்து விடாதீர்கள்’ என்று கூறினார்.

வசமாக சிக்கிய வர்ஷினி

சௌந்தர்யா கண்ணீர் விட்டதற்காக எந்த வர்ஷினி அதிகம் கேலி செய்தாரோ அதே வர்ஷினி தீபக்கால் தற்போது கண்ணீர் விட்டு அழுகிறார். தீபக் Safe Game ஆடுவதாகவும் கண்ணீர் விட்டு வர்ஷினி கூற, அவர் அதை பெரிதாக கண்டு கொள்ளவில்லை. மிக வேதனையுடன் இதனை போட்டியாளர்கள் முன்னிலையிலும் நிரூபிக்க பார்க்கும் வர்ஷினி, அவர் நோக்கத்துடன் தான் ஆடுகிறார் என்றும் அது உங்கள் யாருக்குமே தெரியவில்லை என்றும் தெரிவிக்கிறார்.
varshini vs Deepak

எந்த வர்ஷினி சௌந்தர்யா கேமராவை பார்த்து அழுது நடிக்கிறார் என கூறினாரோ அதே வர்ஷினி தற்போது கண்ணீர் விட்டு புலம்புவதை பார்க்கும் சவுந்தர்யாவின் ரசிர்கள் அதிகமாக கலாய்த்து வருகின்றனர். எமோஷன் என்பது அனைவருக்கும் ஒன்றுதான் என்றும் இப்படி சிரித்துக் கொண்டே அதை நகையாடினால் இப்படித்தான் நடக்கும் என்றும் வர்ஷினிக்கு பாடம் எடுத்தும் வருகின்றனர்.