லப்பர் பந்து ரைட்டிங் பார்த்து ஆச்சர்யப்பட்டேன்… தினேஷ் நடிப்பை வாயாரப் புகழ்ந்த ஷங்கர்..

கடந்த 2024-ம் ஆண்டில் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு விமர்சனங்களால் சக்கைப் போடு போட்ட படம் தான் லப்பர் பந்து. தமிழரசன் பச்சமுத்து இயக்கிய இப்படத்தில் கெத்து கதாபாத்திரத்தில் அட்டகத்தி தினேஷும், அன்புவாக ஹரீஷ் கல்யாணும்…

Director Shankar

கடந்த 2024-ம் ஆண்டில் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு விமர்சனங்களால் சக்கைப் போடு போட்ட படம் தான் லப்பர் பந்து. தமிழரசன் பச்சமுத்து இயக்கிய இப்படத்தில் கெத்து கதாபாத்திரத்தில் அட்டகத்தி தினேஷும், அன்புவாக ஹரீஷ் கல்யாணும் நடித்திருந்தனர்.

வெகு நாட்களுக்குப் பிறகு ஒரு படம் விமர்சனங்களால் குடும்பம் குடும்பமாக வந்து தியேட்டரில் அமர வைத்த படம் என்றால் அது லப்பர் பந்து திரைப்படம் தான். மாமனார் மருமகன் ஈகோ, கணவன்-மனைவி புரிதல், விளையாட்டு அரசியல், செல்லக் காதல் என அனைத்து அம்சங்களும் கலந்த படமாக லப்பர் பந்து வசூலில் மிரட்டியது.

இப்படத்தினை திரைத்துறையினர் பலரும் கொண்டாடி வேளையில் இயக்குநர் ஷங்கர் சமீபத்தில் தனது பேட்டியில் லப்பர் பந்து படம் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். அதில், “லப்பர் பந்து படம் அருமையாக இருந்தது. இப்படத்தின் எழுத்து, மேக்கிங் பார்த்து ஆச்சர்யப்பட்டேன். முக்கியமாக தினேஷ் நடிப்பைப் பார்த்து மிக ஆச்சர்யப்பட்டேன். செம ஆக்டிங் அது.

எப்படி இருக்கு கேம் சேஞ்சர்.. கம்பேக் கொடுத்தாரா ஷங்கர்..? வெளியான சோஷியல் மீடியா விமர்சனம்

எந்த நடிகரின் சாயலும் அதில் இல்லை. நடிப்பில் தனியாகத் தெரிகிறார். அலட்டாமல், கரெக்டாக நடிக்கிறார். இன்னும் கேட்டால் அது நடிப்பு என்றே தெரியவில்லை. அற்புதமான நடிப்பு அது. இந்தப் படத்தினைப் பார்த்து நான் ட்வீட் போட வில்லை. இருந்த போதிலும் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்கிறேன். மொத்த படக்குழுவிற்கும் எனது வாழ்த்துக்கள். குறிப்பாக தினேஷுக்கும், ஸ்வாசிகாவிற்கும். ஸ்வாசிகாவின் நடிப்பு மிக ஆழமாக இருந்தது.

மேலும் ரஜினிகாந்தின் வாழ்க்கை வரலாற்றினை பயோபிக் ஆக எடுக்க ஆசை உள்ளது எனவும், அடுத்து இந்தியன் 3, வேள்பாரி போன்ற படங்கள் அடுத்தடுத்து லைனில் உள்ளதாகவும் ஷங்கர் அந்தப் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடித்த கேம் சேஞ்சர் திரைப்படம் உலகமெங்கும் பொங்கல் வெளியீடாக இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.