பொங்கல் பண்டிகை.. ஆம்னி பஸ்களில் திருநெல்வேலி, நாகர்கோவில் செல்ல ரூ.4000 கட்டணம்

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பஸ்களின் கட்டணங்கள் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு உயர்ந்துள்ளது. திருநெல்வேலி, நாகர்கோவில் செல்வதற்கு ரூ.4 ஆயிரம் கட்டணம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி, புத்தாண்டு, ஆயுத பூஜை, வார விடுமுறை,…

Pongal festival: Omni buses to Tirunelveli and Nagercoil will cost Rs. 4000

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பஸ்களின் கட்டணங்கள் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு உயர்ந்துள்ளது. திருநெல்வேலி, நாகர்கோவில் செல்வதற்கு ரூ.4 ஆயிரம் கட்டணம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி, புத்தாண்டு, ஆயுத பூஜை, வார விடுமுறை, தேர்வு விடுமுறைகள், சுபமூகூர்த்த நாட்கள், பொங்கல் பண்டிகை வந்தாலே ஆம்னி பஸ் உரிமையாளர்கள் காட்டில் அடை மழை தான். அதுவரை சாதாரண கட்டணங்களில் இயங்கி வரும் ஆம்னி பஸ்கள், பண்டிகை காலம் மற்றும் விடுமுறை காலங்களில் கட்டணங்களை 2 முதல் 3 மடங்கு அதிகரித்துவிடுவார்கள்.

வருகிற 14-ந்தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடுவதற்காக வெளியூர்களில் உள்ளவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். குறிப்பாக தமிழகம் முழுவதும் உள்ள மக்கள் சென்னையில் வசித்து வேலை செய்கிறார்கள். இவர்கள் பஸ், ரெயல்களில் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணிப்பது வழக்கம். ரயில்களில் பயணிக்க முன்பதிவு டிக்கெட்டுகள் தீர்ந்துவிட்ட நிலையில், மக்களின் அடுத்த தேர்வு ஆம்னி பஸ்கள்தான்.

 

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டாலும் பெரும்பாலான பயணிகள் முதல் விருப்பம் ஆம்னி பஸ்கள் தான். காரணம், கிளாம்பாக்கம் சென்று அரசு பஸ்களை பிடிப்பதை விட கோயம்பேட்டில் இருந்தே அல்லது வேளச்சேரியில் இருந்தே தனியார் ஆம்னி பஸ்களில் பயணிக்க முடியும். சென்னை நகருக்குள் முக்கிய பகுதிகளுக்கு ஆம்னி பஸ்கள் வருவதால், அதில் பயணிக்க மக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்.

இதனால் சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் ஆம்னி பஸ்களின் கட்டணம் எப்போதுமே அதிகமாக இருக்கும். இப்போது பொங்கல் என்பதால் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்களின் கட்டணம் மிகவும் உச்சமாக உள்ளது. அதாவது, வழக்கமாக நெல்லை, நாகர்கோவிலுக்கு ரூ.800, ரூ.850-க்கு ஆம்னி பஸ்களில் வசூலிக்கப்படும் பயணக் கட்டணம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பன் மடங்கு அதிகரித்து உள்ளது.

பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து பெரும்பாலான மக்கள் 10-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அந்த வகையில், மேற்குறிப்பிட்ட தேதிகளில் தென்மாவட்ட நகரங்களான நெல்லை மற்றும் நாகர்கோவிலுக்கு செல்வதற்கு தனியார் ஆம்னி பஸ்களில் அதிகபட்சமாக ரூ.4 ஆயிரம் வரை உள்ளது. ஆன்லைன் தளத்திலேயே இந்த கட்டணங்களை பார்க்க முடியும்.

இதே போன்று, கோவைக்கு அதிகபட்சமாக ரூ.2,850 வசூலிக்கப்படுகிறது. ஆம்னி பஸ்களின் அதிகபட்சமான கட்டண கொள்ளை ஆன்-லைனில் வெளிப்படையாக இருந்த போதிலும் இது குறித்து தமிழக அரசு போக்குவரத்துத்துறை இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.