11,000 கிலோ மீட்டர்.. குகையிலேயே வீடு.. காதலனுக்காக 42 வயதில் பெண் செஞ்ச விஷயம்..

காதலுக்கு எப்போதுமே வயது, ஜாதி, மதம் உள்ளிட்ட விஷயங்கள் தடையில்லை என்பதை பல தம்பதிகள் சமீப காலமாக நிரூபித்து வந்த வண்ணம் உள்ளனர். ஒரு பக்கம் இதற்கெல்லாம் எதிர்ப்பு இருந்தாலும் இன்னொரு பக்கம் அதை…

Natalie and Feras Love

காதலுக்கு எப்போதுமே வயது, ஜாதி, மதம் உள்ளிட்ட விஷயங்கள் தடையில்லை என்பதை பல தம்பதிகள் சமீப காலமாக நிரூபித்து வந்த வண்ணம் உள்ளனர். ஒரு பக்கம் இதற்கெல்லாம் எதிர்ப்பு இருந்தாலும் இன்னொரு பக்கம் அதை எல்லாம் தாண்டி தங்களின் அன்பிலும், தங்களது காதலிலுமே நிலைத்து நிற்கும் பல ஜோடிகள் இணைந்து தங்களது வாழ்க்கையையும் மகிழ்ச்சியாக நகர்த்தி வருவதை நாம் கேள்விப்பட்டிருப்போம். அந்த வகையில் சமீபத்தில் அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் தனது காதலனுக்காக 11,000 கிலோ மீட்டர் தள்ளி வந்த சம்பவமும் அதன் பின்னால் இருந்த காதல் கதையும் பலரையும் மனம் நெகிழ வைத்துள்ளது.

அமெரிக்க நாட்டின் புளோரிடாவை அடுத்த ஒர்லாண்டோ என்னும் பகுதியைச் சேர்ந்தவர் தான் நட்டாலீ ஸ்னைடர் (Natalie Snider). இவருக்கு 42 வயதாகும் நிலையில் ஒரு பிரபல டிராவல் நிறுவனத்தில் டூரிஸ்ட் கைடாக பணிபுரிந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவரது பணி நிமித்தம் காரணமாக ஜெர்மனி, நியூசிலாந்து, அமெரிக்கா என பல நாடுகளுக்கும் நட்டாலீ சுற்றித்திரிந்து வந்துள்ளார்.

வயது பார்க்காத காதல்

அப்படி கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம், ஜோர்டன் நாட்டிற்கு சென்ற போது அங்கே பெட்ரா என்ற புகழ் வாய்ந்த சுற்றுலா தலத்திற்கும் நட்டாலீ சென்றுள்ளார். அங்கே 32 வயதாகும் பெராஸ் பவுதின் (Feras Boudin) என்ற வாலிபரையும் முதல் முதலாக நட்டாலீ சந்தித்துள்ளார். Bedouin என்ற பழங்குடியினத்தை சேர்ந்த பெராஸ் குதிரை மீது அப்போது திரிய, அதனை புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் நட்டாலீ பகிர்ந்துள்ளார்.
Love

இந்த பதிவை சமூக வலைத்தளத்தில் கவனித்த பெராஸ், அது தான் என்பதை கமெண்ட்டில் குறிப்பிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து சமூக வலைத்தளம் மூலம் நட்டாலீயுடன் பேச தொடங்கிய பெராஸ், தனது நாட்டிற்கு மீண்டும் ஒருமுறை வருகை தரும்படி அழைத்துள்ளார். தங்களின் பழங்குடியின மக்களின் வாழ்க்கை பற்றி அறிந்து கொள்ளவும் வரும்படி அவர் குறிப்பிட, 18 மாதங்களாக இருவரது நட்பும் சமூக வலைத்தளத்தில் உரையாடி வளர்ந்துள்ளது.

குகையிலேயே காதலன் வீடு

இதனைத் தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், ஜோர்டன் சென்ற நட்டாலீ, வயது வித்தியாசத்தை பெரிதாக கருதாமல் பெராஸுடன் காதலிலும் விழுந்துள்ளார். இதனைத் தொடர்ந்து பழங்குடியினத்தை சேர்ந்த தனது காதலனுக்காக அமெரிக்காவையே விட்டுட்டு சுமார் 11,000 கிலோ மீட்டர் தூரம் பயணம் மேற்கொண்ட நட்டாலீ, தற்போது பெராஸுடன் ஜோர்டானில் உள்ள குகை பகுதிகளில் வசித்து வருகிறார்.
Jordan Tribe Love Story

Bedouin பழங்குடியின மக்கள் வாழ்க்கை முறை போல குகையில் இரண்டு அறைகளுடன் அவர்களின் வீடு உள்ளது. ஒரு அறையில் ஓட்டகங்கள், கோழிகள் மற்றும் ஆடுகளுக்கான உணவுகளும் வைக்கப்பட்டுள்ளது. ஜோர்டனிலேயே ஒரு டூரிஸ்ட் கம்பெனி தொடங்கிய நட்டாலீ, அங்கே வரும் சுற்றுலா பயணிகளுக்கு சிறந்த ஒரு பயணத்தையும் கொடுத்து வருகிறார்.

அடிக்கடி அமெரிக்கா மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கும் சென்று வரும் நட்டாலீ, நகர வாழ்க்கையை புறந்தள்ளி விட்டு இப்படி ஒரு பழங்குடியின வாழ்க்கை முறையில் காதலனுடன் வாழ்ந்து வருவது பலரையும் வியந்து பார்க்க வைத்துள்ளது.