UPI Offline Payment : ஒரு காலத்தில் எல்லாம் நாம் விரும்பும் பொருட்களை கடைகளுக்கு சென்று வாங்கி சில்லறை மாற்றி கையில் எட்டுவதற்கு முன் ஒரு வழியாகி விடுவோம். காலையில் திறக்கும் கடைகளில் சில்லறை மாற்ற முடியாமல் அதிக ரூபாய் நோட்டுடன் சென்று நிற்கும் போது அந்த கடைக்காரர் திண்டாடித்தான் போவார். இப்படி கையில் பணம் இருந்தும் சில பொருட்களை வாங்குவதற்கு முன் திக்கி திணறிவிடும் நிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே டிஜிட்டல் யுபிஐ பண பரிமாற்ற சேவைகள் மிகச் சிறப்பான ஒன்றாக செயல்பட்டு வருகிறது.
கையில் பணம் இல்லை என்றாலும் நமது அக்கவுண்டில் பணம் இருந்தாலே யாருக்கும் எந்த நேரத்தில் எப்படி வேண்டுமானாலும் அனுப்ப முடியும் என்ற வசதி உள்ளதால் பேருந்து வரைக்கும் UPI மூலம் டிக்கெட் எடுத்து பயணம் செய்வதற்கு வசதி அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. வயதான நபர்களாக இருந்தாலும், இளைஞர்களாக இருந்தாலும் பணத்தை அனுப்புவதற்கு அனைவரிடமும் யூபிஐ வசதி இருப்பது ஒரு சிறப்பம்சமாகவே பார்க்கப்பட்டு வருகிறது.
ஆனால் அதே நேரத்தில் இப்படி பண பரிமாற்ற சேவை மூலம் நாம் மற்றவர்களுக்கு பணம் அனுப்பும் போது சேவைகள் இடைப்பட்டு சரியான நேரத்தில் பணம் சென்று சேர்வதற்கு சில சிக்கல்களும் உருவாகி தான் வருகிறது. நெட்வொர்க் அல்லது வங்கியின் சர்வர்கள் பிரச்சனைகள் காரணமாக இந்த சேவை தாமதமாவதால் சில நேரங்களில் வாடிக்கையாளர்களும் அதே நேரத்தில் முதலாளிகளும் கூட வேதனை கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளது.
அப்படி ஒரு சூழலில் தான் ஆன்லைனில் கூட செல்லாமல், ஸ்மார்ட் போன் கூட இல்லாமல் சாதாரண மொபைல் மூலமும் நாம் ஒருவருக்கு பணத்தை அனுப்ப முடியும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா. அப்படி உள்ள ஒரு சேவை பற்றியும் அதன் பின்னணி என்ன என்பது பற்றியும் தான் தற்போது பார்க்க போகிறோம். ஆன்லைன் வசதி இல்லாமலேயே ஒருவரது போன் மூலம் *99# எண்ணை டயல் செய்தால் அதில் நமது வங்கி கணக்கின் விவரங்களை சேர்ப்பதற்கான வழிகள் வரும்.
ஆப்லைன்லயே பணம் செலுத்தலாம்
அதன் மூலம் நமக்கு தேவையான தகவல்களை ஆஃப்லைனில் நமது மொபைலில் பதிவு செய்து வைத்தாலே தேவைப்படும் நேரத்தில் வெறுமென நம்பரை டயல் செய்து வங்கி கணக்குகளில் பணத்தையும் நம்மால் அனுப்ப முடியும். இந்த சேவை கடந்த பல ஆண்டுகளாக இருந்து வந்தாலும் பல மக்களும் இன்று ஆன்லைன் UPI மூலம் பணத்தை அனுப்ப நினைத்து சில நேரம் சிக்கலில் மாட்டிக் கொள்வது வாடிக்கையாக இருந்து வருகிறது.
அப்படி இருக்கும் நபர்களுக்கு நிச்சயம் இந்த ஆப்லைன் பணப் பரிமாற்ற சேவை உதவும் என்றே தெரிகிறது.