உலகெங்கும் சாலை விபத்துக்களில் வருடந்தோறும் உயிரிழப்போரின் எண்ணிக்கை மிக அதிகமாகிக் கொண்டே செல்கிறது. சாலை விதிகளை மதிக்காமலும், மதுபோதையில் வாகனம் ஓட்டுவதும், செல்போன் பேசிக் கொண்டே வாகனம் ஓட்டுவதும் என போக்குவரத்து விதிமீறல்களால் உயிரிழப்பும், உடல் ஊனமும் ஏற்படுகிறது. விபத்துக்களால் ஏற்படும் திடீர் மரணம் ஒட்டுமொத்த குடும்பத்தையே நிலைகுலைய வைக்கிறது. குடும்பத்தின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகி விடுகிறது.
அந்த வகையில் சீனாவில் ஒரு முதியவர் கடந்த 36 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு விபத்தில் தனது மொத்த குடும்பத்தினையும் இழந்திருக்கிறார். சீனாவைச் சேர்ந்த ஜாங் ஜங்விங் (74) என்ற முதியவர் ஒரு விபத்தில் தனது மனைவி, சகோதரி மற்றும் நான்கு குழந்தைகளையும் ஒட்டு மொத்தமாய் இழந்திருக்கிறார். மனதில் ஆறாத ரணமாய் வடுவாய் புதைந்து கிடக்கும் ஜாங் ஜங்விங் தனக்கு ஏற்பட்டது போன்று இனி ஒருவருக்கும் ஏற்படக் கூடாது என்ற எண்ணத்தில் அதிரடியாக ஒரு முடிவு எடுத்தார்.
அதிர்ந்த மதுரை.. டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிராக 11 கிராம மக்கள் திரண்ட பேரணி..
அதுதான் போக்குவரத்தினை சீர் செய்வது. எந்த விபத்தில் தனது குடும்பத்தினை இழந்தாரோ அது போன்று இனி விபத்துக்கள் ஏற்படக் கூடாது என்ற எண்ணத்தில் கடந்த 36 வருடங்களாக போக்குவரத்தினை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார். தன்னார்வலராக இதனைச் செய்து வரும் ஜாங் ஜங்விங் தனது வாழ்வாதரத்திற்கு பிளாஸ்டிக் பாட்டில்களைச் சேகரித்து விற்பனை செய்து அதில் கிடைக்கும் வருமானத்தில் வாழ்ந்து வருகிறார். நம்மூர் டிராபிக் ராமசாமி போல போக்குவரத்து விதிமீறல்களை கண்டித்து போக்குவரத்தினை செவ்வனே சீர்செய்து வரும் இந்த முதியவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.