Bigg Boss Tamil Season 8 Day 93 இல் முன்னாள் போட்டியாளர்கள் ஒவ்வொருவராக வீட்டுக்குள்ளே வர ஆரம்பித்தனர். முதலில் சுனிதா மற்றும் வர்ஷினி வந்தார்கள். சுனிதா வந்த உடனேயே விளையாட்டை பற்றி போட்டு உடைத்துவிட்டார். ஜாக்குலின் துணை இல்லாமல் விளையாட மாட்டார், சௌந்தர்யா இந்த கேமுக்கு எதுவுமே செய்யவில்லை, விஷால் முக்கோண காதல் செய்கிறார் என்று அனைவரையும் போட்டு தாக்கி விட்டார்.
அடுத்ததாக தொடர்ந்து ரியா, ரவீந்தர், அர்னவ், தார்ஷா குப்தா, சாச்சனா, சிவகுமார் ஆகியோர் உள்ளே வந்தனர். வந்தவர்கள் ஆளாளுக்கு அவரவர் கருத்துக்களை முன்வைத்தனர். ஆனால் வந்தவர்கள் அனைவரும் விஷாலிடம் சென்று நீங்கள் தர்ஷிகா அன்ஷிதா விஷயத்தில் செய்தது தவறு என்று அவரை வச்சு செய்து விட்டனர். சுனிதாவில் ஆரம்பித்து சாட்சினா என அனைவரும் நீ எப்படி ரெண்டு பொன்னுட்ட ஒரே மாதிரி நீ பேசுவ உனக்கு இன்ட்ரஸ்ட் இல்லனா நீ அவங்களுக்கு ஸ்பேஸ் கொடுத்திருக்கக் கூடாது ஒரு பவுண்டரி வச்சு நீ பழகி இருக்கணும், நீ எப்படி பண்ணின என்பதை நாங்க எல்லாருமே டிவில பாத்துட்டோம் என்று பேசினார்கள்.
பகல் முழுவதும் விஷால் எல்லோருக்கும் பொறுமையாக பதில் கூறினார். ஏனென்றால் ரியா மற்றும் சுனிதா மூடி மறைத்து பேசினார்கள். ஆனால் இரவு ஆனதும் விஷாலுக்கு நெருக்கமான சாச்சனா முகத்தில் அடித்தார் போல் நேருக்கு நேராக சொல்லிவிட்டார். நீ ஸ்பேஸ் கொடுத்தது தப்புதான் நீ ஒருத்தர் கிட்ட க்ளோசா பழகிருந்தா பரவால்ல ரெண்டு பேரையுமே லவ் பண்ற மாதிரி தான் நீ பழகி இருக்க. அப்படித்தான் நாங்க டிவில பார்க்கும்போது எங்களுக்கு தெரிஞ்சது மக்களும் அதையேதான் நினைச்சாங்க. நீ வந்து லவ்வர் பாய் அப்படின்னு நினைச்சுகிட்டு நீ பண்ற ஆனா நீ அது கிடையாது நீ பிளே பாய் நீ பொண்ணுங்கள கரெக்ட் பண்ற அப்படிங்குற மாதிரி விஷால் தப்பா தான் தெரிஞ்சார் என்று சொன்னவுடன் விஷாலால் தாங்க முடியவில்லை.
விஷால் கடைசியில் கண்ணீரே விட்டுவிட்டார். அந்த தப்பான நோக்கத்தில் எதையுமே செய்யவில்லை என்று தான் எல்லோரிடமும் கூறினார். இறுதியாக ஜாக்குலின், ரயான், முத்துகுமரன் எல்லோரும் அவருக்கு ஆறுதல் கூறிக் கொண்டிருக்கிறார்கள். நடந்தது நடந்து போச்சு அதை மாற்ற முடியாது நீ தப்பான இன்டென்ஷன்ல பண்ணலைன்னு சொல்லற சரி இனிமே எதுவும் நடக்காமல் நீ பார்த்துக்கோ இப்ப நம்ம போய் எதுவும் நடந்ததை மாற்ற முடியாது இப்போ நினைச்சு நீ பீல் பண்றது பிரயோஜனமே இல்லை என்று கூறுகிறார்கள். அடுத்தது நாளை முன்னாள் போட்டியாளர்கள் யார் வீட்டிற்குள் வருவார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.