பூனையை கண்டுபிடித்து கொடுத்தால் ரூ.10 ஆயிரம் பரிசு.. கன்னியாகுமரியில் அறிவிப்பு

கன்னியாகுமரி : பூனையை கண்டுபிடித்து கொடுத்தால் ரூ.10 ஆயிரம் பரிசு என்று கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் பகுதியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. பாசமாக வளர்த்த செல்லப்பிராணிகள் மாயமானால் குழந்தை காணாமல் போனால் எப்படி பதறுவார்களோ அதுபோல்…

Announcement in Kanyakumari: Rs. 10,000 reward for finding and returning a cat

கன்னியாகுமரி : பூனையை கண்டுபிடித்து கொடுத்தால் ரூ.10 ஆயிரம் பரிசு என்று கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் பகுதியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

பாசமாக வளர்த்த செல்லப்பிராணிகள் மாயமானால் குழந்தை காணாமல் போனால் எப்படி பதறுவார்களோ அதுபோல் அதனை வளர்க்கும் எஜமான்கள் பதறுகிறார்கள். தங்களால் முடிந்த அளவு அதனை தேடி கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார்கள். சில காணாமல் போன செல்ல பிராணியை கண்டுபிடிக்க விளம்பரமும் செய்கிறார்கள். கண்டுபிடித்து கொண்டுத்தால் பரிசும் தருகிறார்கள். அந்த வகையில் கன்னியாகுமரியில் செல்லப்பிராணிக்காக போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாரை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது வீட்டில் சைபீரியன் வகையை சேர்ந்த பூனை ஒன்றை பாசமாக வளர்த்து வந்தார். நெய்லா என்ற பெயர் கொண்ட அந்த பூனை கறுப்பு, வெள்ளை நிறமுடையது. இந்த நிலையில் அந்த நெய்லா பூனையை கடந்த ஜனவரி 2-ந் தேதி முதல் காணவில்லை. அதை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்கமுடியவில்லை. இதைதொடர்ந்து அந்த நபர் திருவட்டார் பகுதிகளில் பூனையை கண்டுபிடித்து தர வேண்டி சுவரொட்டிகளை ஒட்டியுள்ளார்.

அதில் தனது பூனை திருவட்டார் தபால் நிலையம் அருகில் வைத்து மாயமானதாகவும், பூனையை கண்டுபிடித்து கொடுத்தால் ரூ.10 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் எனவும் கியூ ஆர் கோடு மற்றும் யூடியூப் லிங்க் விவரத்துடன் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பூனையை கண்டுபிடித்து கொடுத்தால் ரூ.10 ஆயிரம் சன்மானமா? என பலரும் வியப்புடன் அதை படித்து விட்டு செல்கின்றனர்.