இந்தியாவுக்கு எதிரா.. முதல் முறையா ஹெட்டிற்கு நேர்ந்த அவமானம்.. சைலண்டாக சம்பவம் செய்த பும்ரா..

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் மோதி வரும் நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 311 ரன்களை சேர்த்துள்ளது. டிசம்பர் 26 ஆம் தேதி பாக்ஸிங் டே டெஸ்ட்…

Head vs Bumrah in Boxing Day Test

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் மோதி வரும் நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 311 ரன்களை சேர்த்துள்ளது. டிசம்பர் 26 ஆம் தேதி பாக்ஸிங் டே டெஸ்ட் கிரிக்கெட் ஆஸ்திரேலியாவில் நடைபெறுவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. இந்த போட்டி எப்போதுமே மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறும் நிலையில், இந்த முறை அந்த பாக்ஸிங் டே டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதி இருந்தது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 311 ரன்கள் எடுத்துள்ளது. மேலும் இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்காக அறிமுகமான 19 வயதான இளம் வீரர் சாம் கொன்ஸ்டாஸ், பும்ராவின் ஓவரில் சிக்ஸர்களை பறக்கவிட்டு அனைவரையுமே அசர வைத்திருந்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் பயப்படும் பந்து வீச்சாளர் என்ற தடுமாற்றம் கொஞ்சம் கூட இல்லாமல் பும்ரா ஓவரில் நிறைய பவுண்டரிகளை பறக்க விட்டிருந்தார்.

டக் அவுட்டான ஹெட்..

அரைச் சதம் கடந்த சாம் கொன்ஸ்டாஸ் ஜடேஜா ஓவரில் அவுட்டாகி இருந்தார். அதன் பின்னரும் ஆஸ்திரேலிய வீரர்கள் ரன் சேர்த்தாலும் அவர்களது அதிரடி குறைந்து போனது. தொடர்ந்து கவாஜாவும் 57 ரன்கள், எடுக்க மூன்றாவது வீரராக உள்ளே வந்த மார்னஸ் 72 ரன்களும் எடுத்து அவுட்டாகி இருந்தனர். இதன் பின்னர் நான்காவது வீரராக ஆடியே ஸ்டீவ் ஸ்மித், முதல் நாள் ஆட்ட முடிவில் 68 ரன்களுடன் களத்திலும் இருந்து வருகிறார்.

இப்படி ஆஸ்திரேலிய அணியின் முதல் நான்கு வீரர்கள் அரைச்சதம் அடித்தது ஒரு நல்ல அம்சமாக பார்க்கப்பட்டாலும் அதன் பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் நடையை கட்டி இருந்தனர். டிராவிஸ் ஹெட் 7 பந்துகள் மட்டுமே சந்தித்திருந்த நிலையில் ஒரு ரன் கூட சேர்க்காமல் பும்ரா பந்துவீச்சில் டக் அவுட் ஆகி இருந்தார்.

Head Duck Out

சம்பவம் செய்த பும்ரா..

இந்த போட்டியில் சாம் கொன்ஸ்டாஸ் அடித்து ஆடி எந்த அளவுக்கு சிறப்பம்சமாக இருந்ததோ அதற்கு நிகராக ஹெட் டக் அவுட்டானதும் அதிகம் பேசப்பட்டிருந்தது. தொடர்ந்து வந்த மார்ஷ் 4 ரன்களில் அவுட்டாக அலெக்ஸ் கேரி 31 ரன்களிலும் அவுட்டாகி இருந்தார். கம்மின்ஸ் மற்றும் ஸ்மித் ஆகிய இருவரும் களத்தில் இருக்க இரண்டாவது நாளும் விறுவிறுப்பாக இருக்கும் என தெரிகிறது.

இதனிடையே முதல் முறையாக டிராவிஸ் ஹெட் இந்திய அணிக்கு எதிரான சர்வதேச கிரிக்கெட் போட்டியில் டக் அவுட் ஆகியுள்ளார். இந்திய அணி என்றாலே சதத்தை அடிக்காமல் களத்தில் இருந்து வெளியே போகாத ஹெட், மூன்று வடிவிலும் அவர்களுக்கு அச்சுறுத்தலை கொடுத்துள்ளார். அப்படி ஒரு சூழலில் முதல் முறையாக அவர் இந்திய அணிக்கு எதிராக டக் அவுட்டாகி உள்ளதும், அதற்குப் பின்னால் பும்ரா இருந்ததையும் ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.