50 ரன் கடந்த ஆஸ்திரேலிய தொடக்க வீரர்கள்.. அப்போ இந்தியா தோத்துருவாங்க.. வியப்பான காரணம் சொல்லும் ரசிகர்கள்..

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மெல்போர்ன் மைதானத்தில் மோதி வரும் நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவு பெற்றுள்ள நிலையில் ஒரு சில புள்ளி விவரங்கள் காரணமாக இந்திய அணி இந்த டெஸ்டில்…

Khawaja and sam konstas vs india

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மெல்போர்ன் மைதானத்தில் மோதி வரும் நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவு பெற்றுள்ள நிலையில் ஒரு சில புள்ளி விவரங்கள் காரணமாக இந்திய அணி இந்த டெஸ்டில் தோற்றுவிடும் என ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர். மெல்போர்ன் மைதானத்தில் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே ஆரம்பமான நிலையில் மைதானத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடியிருந்தனர்.

முதல் மூன்று டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரராக ஆடி இருந்த ஸ்வீனிக்கு பதிலாக இந்த முறை 19 வயதான சாம் கோன்ஸ்டாஸ் அறிமுகமாகி இருந்தார். அவரது ஆட்டம் அப்படியே அச்சுறுத்தலான ஒன்றாக விளங்கி இருந்ததுடன் மட்டுமில்லாமல் பும்ரா உள்ளிட்ட எந்த இந்திய பந்து வீச்சாளர்களையும் விடாமல் பயமின்றி அடித்து ஆடியிருந்தார். அறிமுக டெஸ்டில் அரைச்சதம் கடந்த சாம் கொன்ஸ்டாஸ், ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

பட்டையை கிளப்பிய ஆஸ்திரேலியா..

அவர் ஆட்டமிழந்த பின்னர் ரன் ரேட் குறைந்தாலும் மற்றொரு தொடக்க வீரரான கவாஜா, ஸ்மித், மார்னஸ் என அனைவருமே ஐம்பது ரன்களை கடந்து சிறப்பாக ஆடி ரன் சேர்த்தனர். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி ஆறு விக்கெட்டுகள் இழப்புக்கு 311 ரன்கள் எடுத்திருக்க, ஸ்டீவ் ஸ்மித் 68 ரன்களுடனும், பேட் கம்மின்ஸ் 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
Ind vs Aus

ஆரம்பத்தில் இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் சொதப்பினாலும் ஒரு கட்டத்திற்கு பின்னர் சிறப்பாக செயல்பட்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தி வருகின்றனர். அதிலும் சாம் கொன்ஸ்டாஸ், பும்ராவின் பந்து வீச்சை நொறுக்கி இருந்த நிலையில் தனது பந்துவீச்சில் மீண்டும் கம்பேக் கொடுத்த பும்ரா, ஹெட், மார்ஷ், கவாஜா என 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி அமர்க்களப்படுத்தி இருந்தார்.

இந்தியா தோத்து போய்டுமோ..

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ள பும்ரா, இரண்டாவது நாளிலும் ஆஸ்திரேலியாவை விரைவில் ஆல் அவுட் செய்ய முயல்வார் என தெரிகிறது. இதனிடையே ஆஸ்திரேலிய அணியின் இரண்டு தொடக்க வீரர்களும் அரைச்சதமடித்து அவுட்டாகி உள்ளது, இந்திய அணியின் தோல்விக்கான அறிகுறியாக உள்ளதாக ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.
Bumrah vs Head

இதற்கு காரணம் கடந்த 9 முறை ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஜோடி தலா 50 ரன்களை சொந்த மண்ணில் இந்தியாவுக்கு எதிராக கடந்திருந்தனர். அந்த ஒன்பது முறையில் இந்திய அணி ஒரு டெஸ்டில் கூட வெற்றி பெற்றது கிடையாது. அதே போல தற்போதும் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஜோடிகளான சாம் மற்றும் கவாஜா ஆகிய இரண்டு பேரும் தலா 50 ரன்களுக்கு மேல் சொந்த மண்ணில் இந்தியாவுக்கு எதிராக கடந்துள்ளதால் இந்த போட்டியிலும் இந்திய அணி தோல்வி அடையுமா என்றும் ஏக்கத்துடன் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.