பிக் பாஸ் 8 : எங்கேயும் விட்டு கொடுக்க மாட்டேன்.. ஆனா, என்ன போய்.. சவுந்தர்யாவால் கண்ணீர் விட்ட ஜாக்குலின்..

பிக் பாஸ் வீட்டிற்குள் ஆரம்பத்தில் சௌந்தர்யா மற்றும் ஜாக்குலின் ஆகிய இருவரும் மிக நெருங்கிய தோழிகளாக இருந்து வந்தனர். ஆனால் ஒரு கட்டத்துக்கு பின்னர் அவர்கள் இருவருக்கும் இடையே ஏதோ பிரச்சனை உருவாகி பிரிந்தது…

Jacquline emotional on Soundariya

பிக் பாஸ் வீட்டிற்குள் ஆரம்பத்தில் சௌந்தர்யா மற்றும் ஜாக்குலின் ஆகிய இருவரும் மிக நெருங்கிய தோழிகளாக இருந்து வந்தனர். ஆனால் ஒரு கட்டத்துக்கு பின்னர் அவர்கள் இருவருக்கும் இடையே ஏதோ பிரச்சனை உருவாகி பிரிந்தது போல தெரிந்தது. மறுபுறம் சௌந்தர்யாவோ ஜாக்குலினை பற்றி தொடர்ந்து பல இடங்களில் புறணி பேசிக்கொண்டும் நடக்கிறார்.

அவரது சில குணங்கள் சரியில்லை என்றும் அவர் நடிக்கிறார், பொய் பேசுகிறார் என்றும் பல விதமான குற்றச்சாட்டுகளையும் மற்ற போட்டியாளர்களிடம் ஜாக்குலினை பற்றி பதிவு செய்து கொண்டே இருக்கிறார் சௌந்தர்யா. இதற்கு மத்தியில் இந்த வாரம் ஃப்ரீஸ் டாஸ்க் ஆரம்பமாகி இருந்த நிலையில் ஒவ்வொரு போட்டியாளர்களின் குடும்பத்தினரும் பிக் பாஸ் வீட்டுக்குள் வருகை தர, அப்போது மஞ்சரியின் மகன், தாய், சகோதரி உள்ளிட்டோரும் வந்திருந்தனர்.

ஜாக்குலின் நடிக்குறா..

மேலும் இந்த முறை போட்டியாளர்களின் குடும்பத்திலிருந்து வருபவர்களிடம் மற்ற போட்டியாளர்களிடம் தோன்றும் முரண்பாடான விஷயத்தைப் பற்றி பேசவும் பிக் பாஸ் எடுத்துரைத்திருந்தார். அப்போது மஞ்சரியின் குடும்பத்தினர், ஜாக்குலின் மற்றும் மஞ்சரி ஆகிய இருவரும் நடிப்பதாக சவுந்தர்யா அனைவரிடமும் குறிப்பிடுவதாகவும் தெரிவிக்க, அந்த இரண்டு பேரின் முகமே மாறிப்போனது.
Sound vs Jack

இந்த நிலையில் தன்னை பற்றி மற்றவர்களிடம் வேறு விதமாக குறிப்பிடுவதை நினைத்து எமோஷனலான ஜாக்குலின் இது பற்றி ராயனிடமும் சில கருத்துக்களை பேசுகிறார். “உதாரணத்திற்கு சௌந்தர்யா அழும்போது அருகே வந்து எனக்கும் ஆறுதல் சொல்ல வேண்டும் என்று தோன்றுகிறது. ஆனால் அனைவருமே என்னை மதிப்பிடும்போது என்னைப் பற்றி நன்கு தெரிந்த சௌந்தர்யாவே எதிர்த்து எதுவும் செய்யாதது வருத்தமாக இருந்தது.

சவுந்தர்யா சொல்றப்போ வலிக்குது..

நான் இருக்கும் போது மற்றவர்களிடம் என்னைப் பற்றி நன்றாக பேசும் சௌந்தர்யா, நான் இல்லாத போது வேறு மாதிரி தானே பேசுகிறார். அது எனக்கு அதிகமாக வலிக்கிறது. நான் கோபப்படுகிறேன், எரிச்சல் அடைகிறேன், இல்லை கேம் நன்றாக ஆட வேண்டும் என்பதற்காக எனது தோழியை நான் எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்க மாட்டேன்.
Soundariya on Jack

நட்புக்காக எதையும் செய்ய துணிந்த எனக்கு சௌந்தர்யா செய்வதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. வேறு யாரும் பிக்பாஸ் வீட்டில் நான் நடிப்பதாக தெரிவித்திருந்தால் எனக்கு பிரச்சனையே இல்லை. ஆனால் சௌந்தர்யா சொல்லும் போது தான் வலிக்கிறது.

நீ அதிகம் நம்பும் நண்பரால் தான் அழிந்து போகப் போகிறாய் என எனது தாய் கூறும் போது பெரிதாக தெரியவில்லை. ஆனால் அது பிக் பாஸ் வீட்டிற்குள்ளேயே உணர்கிறேன்” என கண்ணீர் மல்க ரயானிடம் தெரிவிக்கிறார் ஜாக்குலின்.