ராத்திரி 3 மணி.. உணவு டெலிவரி ஊழியர் சொன்ன எமோஷனல் கதை.. இந்தியாவையே கண்ணீர் விட வெச்ச பின்னணி..

ஒரு காலத்தில் எல்லாம் பல துறைகளில் ஏராளமான வேலை வாய்ப்புகள் இருக்க, தற்போதோ நிறைய பேர் படித்து முடித்து ஆண்டிற்கு லட்சக்கணக்கான மாணவர்கள் வெளியே வருவதால் வேலைக்கான தட்டுப்பாடுகளும் பல இடங்களில் இருந்து வருவதை…

Food Delivery Emotional Story

ஒரு காலத்தில் எல்லாம் பல துறைகளில் ஏராளமான வேலை வாய்ப்புகள் இருக்க, தற்போதோ நிறைய பேர் படித்து முடித்து ஆண்டிற்கு லட்சக்கணக்கான மாணவர்கள் வெளியே வருவதால் வேலைக்கான தட்டுப்பாடுகளும் பல இடங்களில் இருந்து வருவதை நாம் கேள்விப்பட்டிருப்போம். இதனால் தாங்கள் விரும்பிய துறையில் வேலை கிடைக்கவில்லை என்றாலும் குடும்ப சூழ்நிலை மற்றும் வருமானத்திற்காக ஏதாவது ஒரு வேலையை தேடி பல இளைஞர்களும் பல மன வேதனையுடன் ஓடிக்கொண்டே தான் இருக்கின்றனர்.

அந்த வகையில் தற்போதுள்ள நாட்களில் பல இளைஞர்கள் உணவு டெலிவரி செய்யும் வேலைகளையும் தேர்ந்தெடுத்து மேற்கொண்டு வருகின்றனர். அப்படிப்பட்ட ஒரு இளைஞரின் எமோஷனலான பின்னணியை பற்றி தான் தற்போது பார்க்க போகிறோம். டெல்லி பகுதியைச் சேர்ந்த ஹிமான்ஷு போரா என்ற நபர் இரவு 3 மணி நேரத்தில் தனது வேலையை முடித்து விட்டு வந்த சமயத்தில் சொமேட்டோ மூலம் உணவு ஆர்டர் செய்துள்ளார்.

அப்போது சிவா சர்கார் என்ற இளைஞர் அந்த குளிரையும் பொருட்படுத்தாமல சிரித்த முகத்துடன் உணவு டெலிவரி செய்துள்ளார். அவரை ஹிமான்ஷு கவனித்த போது ஏதோ வேதனை இருப்பதை உணர்ந்து கொண்டதுடன் அவரை வீட்டிற்குள் அழைத்து என்ன பிரச்சனை என்பது பற்றியும் கேட்டுள்ளார். அப்போது கொஞ்சம் நடுக்கத்துடன் இருந்த இளைஞர் சிவா சர்கார் தனது வேதனையான வாழ்க்கையை பற்றியும் பேச தொடங்கி உள்ளார்.

கண்ணீர் விட வைத்த கதை

எட்டாவது படித்துக் கொண்டிருந்த போது தந்தை மறைந்து விட்டதால் படிப்பை பாதியில் நிறுத்தியதாகவும், தற்போது இரவு நேரத்தில் நீண்ட நேரம் உணவு டெலிவரி செய்து தனது இளம் சகோதரியின் திருமணத்திற்கு தேவையான பணத்தை சேர்த்து வருவதாகவும் உருக்கத்துடன் குறிப்பிட்டுள்ளார். அவரது கல்வி, இளமை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இப்படி நீண்ட நேரமாக இரவு நேரத்தில் டெலிவரி செய்வதன் மூலம் உடைந்து போன நிலையில் அவருக்கு 20 முதல் 21 வயது வரை இருக்கலாம் என்றும் தெரிகிறது.

அவரிடம் அதிக நேரம் உரையாடினாலும் பெரிய அளவில் தன்னால் உதவி செய்ய முடியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார் ஹிமான்ஷு போரா. மேலும் இதே போல எத்தனை சிவாக்கள் இந்த சமுதாயத்தில் இருப்பார்கள் என்றும் தங்களது கனவுகளையும், கல்வியையும் தியாகம் செய்துவிட்டு இப்படி குடும்ப சூழ்நிலைக்காக ஓடிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் போரா வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

மனசே ஒடஞ்சு போச்சு

உணவு டெலிவரி செய்ய வந்த இளைஞர் சிரித்த முகத்துடன் அங்கிருந்து கிளம்பினாலும் அவர் சொல்லிவிட்டு போன எமோஷனலான விஷயங்கள் தனது மனதை பெரிதாக பாதித்ததாகவும் குறிப்பிட்டுள்ள போரா, zomato ஊழியரின் நிறுவனரான தீபந்தர் கோயலுக்கு ஒரு கோரிக்கையும் வைத்துள்ளார். இதுபோன்ற இளைஞர்களுக்கு உதவி செய்வது பற்றியும் பல கருத்துக்களையும் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார் போரா.
Viral Post

சில நேரங்களில் உணவு தாமதமாக வரும் போது பல வாடிக்கையாளர்கள் அவர்களை வேலைக்காரர்கள் போல நினைத்து திட்டும் போது இப்படி அவர்களுக்கு பின்னால் இருக்கும் கதையை சிந்தித்து பாருங்கள் என்பதும் பலரின் கோரிக்கையாக உள்ளது.