மலையாளத்தில் இந்த ஆண்டு ஏராளமான திரைப்படங்கள் வெளியாகி உள்ளன. பலருக்கும் மலையாள படங்களை பார்க்க பிடிக்கும். இந்நிலையில் ஒடிடியில் பார்க்க விரும்புவோருக்கு சிறந்த மலையாள திரைப்படங்களை பற்றி பார்ப்போம்.
ஆவேசம்: ரவுடியாக பகத் பாசில் நடித்த ஆவேசம் திரைப்படம் அற்புதமான திரைப்படம் இந்த படம் முதலில் மலையாளத்தில் மட்டுமே வந்தது. இப்போது தமிழிலும் பார்க்க முடியும். இந்த படம் அமேசானில் உள்ளது.
ஏஆர்எம்: இந்த படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் உள்ளது. கோவிலில் உள்ள பொக்கிச நகையை எப்படி பகத் பாசில் கண்டுபிடித்தார் என்பது தான் கதை. நல்ல திரில்லராக இருக்கும்.
தலைவன் : பிஜு மேனன் எப்போதும் மிகவும் கடுமையாக இருக்கும் ஒரு போலீஸ் அதிகாரி. எல்லோரிடமும் மிக கடுமையாக நடந்து கொள்பவர். இந்த ஸ்டேஷன்க்கு மற்றோரு கடுமையான போலீஸ் அதிகாரியாக ஆசிப் அலி வருகிறார். இருவருமே மிக கடுமையானர்வர்கள் என்பதால், ஈகோ வருகிறது. இந்த நிலையில் பிஜு மேனன் மனைவியை ஒருத்தன் கத்தியால் வெட்டுகிறான், இந்த சம்பவம் நடந்த சில நாட்களில் பிஜு மேனன் வீட்டில், தன மனைவியை வெட்டியவனின் மனைவியின் உடல் சடலமாக இருக்க, அதன் பின் நடக்கும் சுவாரஸ்யமே இந்த தலைவன். மலையாளத்தில் தலவன் எனறு அழைக்கப்படும் இந்த சூப்பராக இருக்கும்.
முறா: இந்த ஆண்டு வெளியான ஆக்ஷன் திரில்லர் திரைப்படம். நான்கு இளைஞர்கள் தவறான வழிக்கு சென்று ஜாலியாக இருப்பார்கள். அவர்கள் மதுரையில் கோடிகளை கொள்ளை அடிப்பார்கள். இறுதியில் அவர்களுக்கு என்ன நடந்தது. என்பதாக படம் இருக்கும். இந்த படம் மலையாளத்தில் மட்டுமே இருக்கும். படம் திரையரங்குகளில் பெரிதாக ஓடவில்லை… ஓடிடியில் நல்ல வரவேற்பு உள்ளது.
கோலம்: கோலம் திரைப்படம் 2024 ஆம் ஆண்டு வெளியான மர்மத் திரில்லர் திரைப்படமாகும். ஒரு ஐடி கம்பெனியில் வேலை செய்யும் ஊழியர்கள் முதலாளியை கொன்றுவிடுவார்கள்.. அவர்கள் எப்படி கொன்றார்கள். அதனை எப்படி போலீஸ் அதிகாரி கண்டுபிடித்தார் என்பதாக படம் இருக்கும்.
இதேபோல் பலருக்கும் தெரிந்த கோட் லைப் மஞ்சுமெல் பாஸ்ஸ், அன்வசிப்பின் கண்டதும். குருவாயூர் ஆம்பளநடையில்,வாழை, (மலையாளம்), பகாயம் உள்ளிட்ட படங்களும் சிறப்பாக இருக்கும்.