Google News Initative (GNI) என்பது செய்தித் தளங்களுக்கு ஆதரவாகவும், அதன் நிலைத்தன்மைக்க எதிர்காலத்திற்காகவும் கூகுளால் தொடங்கப்பட்ட ஒரு திட்டமாகும். இந்த திட்டம் 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்டு உலகம் முழுவதும் பல செய்தி தளங்களுக்கு ஆதரவளித்து வருகிறது.
இந்தத் திட்டத்தின் மூலம் செய்தி தளங்களை தரமாகவும் மற்றும் மேம்படுத்தவும் கருவிகள் மற்றும் அதற்கான பயிற்சிகள் வழங்கப்படுகிறது. மேலும் தவறான செய்திகளை தடுக்கவும், தரமான செய்திகளை ஊக்குவிக்கவும் உலகம் முழுவதும் பல செய்தி தளங்களுக்கு பயிற்சிகளையும் வழங்கி வருகிறது.
ஒன்பது இந்திய மொழிகள்
இது GNI இந்திய மொழிகள் திட்டம் என்ற பெயரில் 2023-ம் ஆண்டு இந்தியாவில் தொடங்கப்பட்டது. அதன் வெற்றியை தொடரந்து மீண்டும் 2024-ல் இந்த திட்டம் தொடங்கபட்டது. ஆங்கிலம், இந்தி, கன்னடம், தமிழ், தெலுங்கு, பெங்காலி, மலையாளம், குஜராத்தி மற்றும் மராத்தி ஆகிய 9 மொழிகளில் உள்ள செய்தி வெளியீட்டாளர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதில் இந்தியா முழுவதும் ஏறக்குறைய 500 செய்தி வெளியீட்டாளர்கள் விண்ணப்பித்திருந்தனர். தமிழ் மினிட்ஸ் இணையதளமும் விண்ணபித்தது. இதிலிருந்து ஏறக்குறைய 300 செய்தி வெளியீட்டார்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதில் தமிழ் மினிட்ஸ் இணையதளமும் ஒன்று.
டெக் டாக் வொர்க்ஷாப்கள்
தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு கூகுள் மீட் மூலம் பல்வேறு தலைப்புகளில் “Tech Talk” வொர்க்ஷாப்களை நடத்தினர். இதனை கூகுள் இந்தியா செய்திப் பிரிவு திட்ட மேலாளர் ஸ்வேத்தா சூசன் இலியாஸ், மீடியாலஜி சாப்ட்வேர் நிறுவனத்தின் நிர்வாக மேலாண் இயக்குநர் மனிஷ் திங்கிரா ஆகியோர் வழிநடத்தினர். ஹேமேந்திர சிங் தொழில்நுட்ப ஆலோசனைகலை வழங்கினார். ஒவ்வொரு மொழிக்கும் அந்தந்த மொழிகளில் ஆதரவு வழங்க அந்தந்த மொழி வல்லுநர் ஒருவரும் நியமிக்கப்பட்டனர். தமிழ் மொழியில் ஆதரவு வழங்க ஜோயல் ஜான்சன் என்பவர் நியமிக்கப்பட்டார்.
“Tech Talk” வொர்க்ஷாப்களில் GA4, Pinpoint, ஜென் ஏஐ, NCI, விளம்பர யுக்திகள் ஆகிய தலைப்புகளை சம்பந்தப்பட்ட தொழில்நுட்ப வல்லுநர்களை கொண்டு நடத்தினர்.
தொழில்நுட்ப ஆதரவு
இந்தியா முழுவதும் தேர்வு செய்யப்பட்ட 300 செய்தி வெளியீட்டாளர்களில் இருந்து 100 செய்தி வெளியீட்டார்கள் இரண்டாம் கட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதில் தமிழ் மினிட்ஸ் இணையதளமும் தேர்வானது.
தேர்ந்தெடுக்கப்பட்ட 100 செய்தி வெளியீட்டாளர்களின் இணையதளங்களை முழுமையாக ஆராய்ந்து இணையதளத்தில் உள்ள பிரச்சனைகள் அதற்கான தீர்வுகள், தொழில்நுட்ப உதவிகள், இணையதளத்தை மேம்படுத்துதல், ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் மொபைல் அப்ளிகேஷன்கள் உருவாக்கி தருதல் ஆகியவற்றை வழங்கினர். நமக்கு ஏற்படும் தொழில்நுட்ப சந்தேகங்களுக்கு 1:1 மூலம் தீர்வுகளையும் வழங்கினர்.
இணையதள தொழில்நுட்பத்தில் கோர் வெப் விட்டல்ஸ் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. இதன் மூலம் இணையதளத்தின் வேகம், இணையதளத்தை அணுகும்போது பயனர்களுக்கு ஏற்படும் சிரமங்கள் உள்ளிட்டவற்றை அறிய முடியும். அதனை சரிசெய்து கோர் வெப் விட்டல்ஸ் பாஸ் செய்வதன் மூலம் இணையதளம் சிறப்பாக இயங்க உதவும்.
GNI இந்திய மொழிகள் திட்டத்திற்கு பிறகு தமிழ் மினிட்ஸ் இணையதளத்தின் வேகம், எஸ்இஒ மற்றும் அணுகல் மதிப்பீடுகள் உயர்ந்துள்ளது. கோர் வெப் விட்டல்ஸிலும் பாஸ் செய்துள்ளது. ஒரே மாதத்தில் தமிழ் மினிட்ஸ் இணையதளத்தின் வாசகர்கள் 14.87% உயர்ந்துள்ளனர்.
பின்பாய்ண்ட் (Pinpoint)
பின்பாய்ண்ட் ஆவணங்களின் மிகப்பெரிய சேமிப்பகமாக உள்ளது. இதனைக் கொண்டு தகவல்களை விரைவில் தேடவும், சரிபார்த்துக் கொள்ளவும், ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும் முடியும். கையால் எழுதப்பட்ட ஆவணங்களையும், பிடிஎஃப் உள்ளிட்ட கோப்புகளையும் கொடுத்து தகவல்களை தேட முடியும். ஆடியோ மற்றும் வீடியோக்களையும் எழுத்து வடிவில் மாற்றலாம். இதில் ஏஐ வசதியும் உள்ளதால் தகவல்களை விரைவாக தேடவும், தொகுக்கவும் முடிகிறது. இதனால் மிகப்பெரிய அளவில் நேரத்தைச் சேமிக்கலாம்.
News Consumer Insights (NCI)
கூகுளால் அறிமுகப்பட்டுள்ள இந்த வசதி செய்தி வெளியீட்டாளர்களுக்கு மிகவும் முக்கியமான மற்றும் பயனுள்ள ஒரு வசதியாகும். இதன்மூலம் இணையதள வாசர்களை புரிந்துக் கொள்ள முடியும். பேஜ் ஸ்பீட், கூகுள் அனலிடிக்ஸ், கூகுள் சர்ச் கன்சோல், கூகுள் ஆட் மேனேஜர் மற்றும் கூகுள் ஆட்சென்ஸ் ஆகியவற்றின் தரவுகளைக் கொண்டு விரிவான அறிக்கைகளையும் செயல்படுத்த வேண்டிய பரிந்துரைகளையும் வழங்குகிறது.
ஏஐ தொழில்நுட்பம் (Gen AI)
தமிழ் மினிட்ஸ் இணையதளைத்தை முழுமையாக ஆராய்ந்து இணையதளத்தில் உள்ள பிரச்சனைகளை தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் அறிக்கையாக கொடுத்து, அதனை சரி செய்யவும் ஆதரவு வழங்கினர். மேலும் தமிழ் மினிட்ஸ் இனையதளத்தை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்லும்விதமாக Sortd Gen AI என்ற Plugin-ஐ கொடுத்துள்ளனர். இதன் மூலம் நேரம் மிகவும் சேமிக்கப்படுகிறது. SEO வேலைகளை மிகவும் எளிதாக்குகிறது. செய்திக்கு பொருத்தமான தலைப்புகள், குறிச்சொற்கள், செய்திகளில் உள்ள இலக்கணப் பிழைகள் போன்றவற்றை எளிதில் கண்டறிய முடிகிறது.
தரம் மற்றும் மேம்படுத்துதல்
GNI இந்திய மொழிகள் திட்டத்தின் மூலம் தமிழ் மினிட்ஸ் இணையதளத்திற்கு புதிய வடிமைப்பும், ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் ஆப்களை செய்துக் கொடுத்து புதிய பார்வையாளர்களை பெறவும், தரமான மற்றும் உண்மையான செய்திகளை வழங்கவும், அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்ல ஆதரவு வழங்கியுள்ளனர்.