Bigg Boss Tamil Season 8 Day 78 இல் இந்த வாரம் கேப்டன்சி டாஸ்கை ரத்து செய்ததால் கேப்டன் இல்லாமல் இந்த வாரம் தொடங்கியது. அதனால் முதலில் சென்ற வாரம் கேப்டன் ஆக இருந்த விஷால் ஒவ்வொரு டீமையும் பிரித்தார். யார் குக்கிங் கிளீனிங் போன்றவற்றை பிரித்தார்.
உடனே ஜாக்லின் எழுந்து இதுவரை கேப்டனாக இல்லாதவர்கள் ஒவ்வொரு நாளும் நாங்கள் இன்சார்ஜ் எடுத்துக் கொள்கிறோம். வீட்டு வேலைகளை செய்வதற்கு நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று கேட்டார். அனைவரும் அதற்கு ஒப்புக்கொண்டனர். ஆனால் மஞ்சரி டாஸ்க் விஷயத்தில் கேப்டன் எதுவும் செய்ய முடியாது மற்றதெல்லாம் எடுத்துக் கொள்ளலாம் என்று சொன்னார். பின்னர் நாமினேஷன் பிராசஸ் நடந்தது.
அடுத்ததாக இந்த வாரம் ஃபேமிலி வரமாக தான் இருக்கும். கண்டிப்பாக அதுதான் இருக்க வேண்டும் என்று அனைவரும் பேசிக்கொண்டு இருந்தார்கள். அடுத்ததாக மக்கள் ஆடியன்ஸ் போலிருந்து இந்த வீட்டில் யார் மதிய உணவு சமைக்க வேண்டும் என்பதற்கு சௌந்தர்யா தான் சமைக்க வேண்டும் என்று மக்கள் Vote செய்திருந்தார்கள்.
அதன் அடிப்படையில் பிக் பாஸ் சௌந்தர்யா தான் மதிய உணவு வீட்டில் அனைவருக்கும் செய்யவேண்டும். அதுவும் தனியாக செய்ய வேண்டும் யார் உதவியும் இல்லாமல் செய்ய வேண்டும். மற்றவர்கள் அனைவரும் வேடிக்கை பார்க்க வேண்டும் என்று கூறினார். சௌந்தர்யா எப்படி எல்லாமோ செய்ய தெரியாமல் செய்து புளி குழம்பு என்ற பெயரில் இஞ்சி பூண்டு பட்டர் எல்லாத்தையும் போட்டு ஒரு சமையலை செய்தார். அதை சாப்பிட்ட அனைவரும் நொந்து விட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
மிகவும் புளிப்பாக இருந்தது அதை ரியாக்ஷன் காட்டி முத்துக்குமார் கொடுத்த கமெண்டரி மிகவும் பார்ப்பதற்கு அருமையாக இருந்தது. இதற்கிடையில் கிரிஸ் mom கிரிஸ் son விளையாட்டு விளையாடலாம் என்றும் ஆரம்பித்தார்கள். மொத்தமாக இன்றைய நாள் முழுவதும் சௌந்தர்யாவின் சமையலை பற்றி தான் அனைவரும் பேசிக்கொண்டிருந்தார்கள். பிக் பாஸ் கூட சௌந்தர்யாவின் சமையல் நன்றாக இருந்தது என்று கூறினார். இனி நாளைய தினத்திலிருந்து ஒவ்வொருவரின் குடும்பமாக வீட்டுக்குள்ளே வர ஆரம்பிப்பார்கள். இந்த வாரம் மிகவும் எமோஷனலாக தான் இருக்கும்.