Bigg Boss Tamil Season 8 Day 77 இல் எபிசோட் தொடங்கியதுமே விஷாலின் கேப்பிட்டன்சியை பற்றி பேச ஆரம்பித்தார் விஜய் சேதுபதி. ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் விஷாலுக்கு எதிராக தான் பேசினார்கள். அதற்கு காரணம் அன்ஷிகாவுடனான நட்பு விளையாட்டை பாதித்தது.
முத்துக்குமரன் ஜெஃப்ரி தீபக் ஜாக்குலின் மஞ்சரி அனைவருமே எங்களிடம் எல்லாமே விஷால் கத்தி கத்தி பேசினார் ஆனால் அன்ஷிதாவிடம் Softடாக எதுவாக இருந்தாலும் சொன்னார். அது எங்களுக்கு கண்கூடாக தெரிந்தது. நாங்கள் ஒரு கட்டத்தில் இப்படி செய்யாத விஷால் நீ கேப்டனாக நடுநிலையாய் இருக்கணும் என்று நாங்க சொன்ன பிறகும் மறுபடியும் ஒரு சில நேரத்திலேயே அவர் மீண்டும் அதே போல் தான் செய்தார் அது எங்களுக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.
அந்த இடத்தில் அவர் கேப்டனாக இருக்கவே இல்லை என்று தான் நாங்கள் நினைத்தோம். அவருடைய பிரண்ட்ஷிப் அங்கு விளையாட்டை தடுத்தது என்று கூறினார்கள். அதற்கு விஷால் நான் அப்படி செய்யவில்லை என்று சமாளித்தார். அன்சிதா இவங்க சொல்றதெல்லாம் வேணுமுன்னே சொல்ற மாதிரி இருக்கு. ஆனால் விஷால் அப்படி நடந்துக்கிட்டது எனக்கே தெரிஞ்சதுன்னு இப்படி பண்ணாதன்னு தான் நான் அவன்கிட்ட சொன்னேன் என்று கூறினார்.
இந்த முறை முத்துக்குமரனுக்கு தான் அன்று தவறு செய்ததற்கு ஹெவி டோஸ் விஜய் சேதுபதி கொடுப்பார் என்று பார்த்தால் முத்துக்குமரனுக்கு லைட்டாக அறிவுரை கூறிவிட்டு முடித்து விட்டார் விஜய் சேதுபதி. நீங்கள் இங்கு விட்டுக் கொடுப்பதற்காக வரவில்லை. விளையாண்டு ஜெயிப்பதற்கு தான் வந்திருக்கிறீர்கள். நீங்கள் செய்த ஒரு தவறினால் அனைவரும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
இந்த ஷோ முடிவதற்கு இன்னும் கொஞ்ச நாட்கள் தான் இருக்கு பாத்து தனித்துவமா விளையாடுங்க என்று கூறினார் விஜய் சேதுபதி. இந்த வாரம் ரஞ்சித் எவிக்ட் ஆகி இருக்கிறார். அவர் மிகவும் சந்தோஷமாக வெளியேறினார் விஜய் சேதுபதியிடம் ஒரு ஒர்க்ஷாப் போயிட்டு வந்த மாதிரி இருந்தது. எந்த இடத்திலும் அட்ஜஸ்ட் பண்ணாத நான் எவ்வளவு தூரம் இவ்வளவு நாள் இருந்தது எனக்கு பெரிய விஷயமா தெரியுது என்று உருக்கமாக பேசிவிட்டு சென்றார். இனி வரக்கூடிய வாரம் குடும்ப எபிசோடாக இருக்கலாம் என்பது தெரிகிறது. என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.