நடிகர் ஜெயம் ரவி ஆர்த்தியுடன் சமரச மையத்தில் ஒரு மணி நேரத்திற்கு மேல் பேச்சுவார்த்தை

சென்னை : தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரின் மகள் ஆர்த்தியை காதலித்த நடிகர் ஜெயம் ரவி கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் செய்தார் . 15 ஆண்டு கால திருமண உறவில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட…

Actor Jayam Ravi held talks with Aarthi at the Mediation Center for over an hour

சென்னை : தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரின் மகள் ஆர்த்தியை காதலித்த நடிகர் ஜெயம் ரவி கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் செய்தார் . 15 ஆண்டு கால திருமண உறவில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தற்போது தனித் தனியாக பிரிந்து வாழ்கிறார்கள். இன்று வழக்கு விசாணைக்கு வந்த போது இருவரும் நீதிமன்றத்தில் ஒரு மணி நேரத்திற்கு மேல் மனம் விட்டு பேசினார்கள்.

 

ஜெயம் என்ற தமிழ் திரைப்படத்தில் அறிமுகமானவர் ஜெயம் ரவி, பிரபல சினிமா எடிட்டர் மோகனின் இளைய ஆவார். இவரது மூத்த சகோதரர் ராஜா திரைப்பட இயக்குநர் ஆவர். இவர் பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்து தற்போது முன்னனி தமிழ் நடிகராக ஜெயம் ரவி இருக்கிறார்.

சினிமா மற்றும் சீரியல் தயாரிப்பாளரான சுஜாதா விஜயகுமாரின் மகளான ஆர்த்தியை ஜெயம் ரவி காதலித்து கடந்த 2009 ஆம் திருமணம் செய்து கொண்டனர்.

ஜெயம் ரவி – ஆர்த்தி ரவி தம்பதியருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். 15 ஆண்டு கால திருமண உறவில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது. இதனால் இருவரும் தற்போது தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் தனது மனைவி ஆர்த்தி உடனான திருமண வாழ்வில் இருந்து விலகுவதாக கடந்த மாதம் ஜெயம் ரவி அறிவித்தார்.

இந்நிலையில் மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு ஜெயம் ரவி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து வழங்க வேண்டும் 2009 ஆண்டு பதிவு செய்த எங்கள் திருமண பதிவை ரத்து செய்ய வேண்டும் என கோரினார்.
இந்த வழக்கு சென்னை மூன்றாவது குடும்ப நல நீதிமன்ற நீதிபதி தேன்மொழி முன் கடந்த மாதம் விசாரணைக்கு அப்போது ஜெயம் ரவி, நேரில் ஆஜராகி இருந்தார். அவரின் மனைவி ஆர்த்தி காணொலி காட்சி மூலமாக ஆஜராகி இருந்தார். இதனையடுத்து நீதிபதி இருவருக்கு இடையான பிரச்சினை தொடர்பாக குடுநல நீதிமன்ற சமரச தீர்வு மையத்தின் மூலமாக பேச இருவருக்கும் உத்தரவு பிறப்பித்தார்.

இந்நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி ஆகியோர் நேரில் ஆஜராகினர். அப்போது, மத்தியஸ்தர் நேரில் ஆஜராகி, இன்னும் சமரச பேச்சு வார்த்தை முடியவில்லை என தெரிவித்தார்.இதையடுத்து, சமரச தீர்வு மையத்தில் மனம் விட்டு பேசும்படி ஜெயம் ரவி மற்றும் ஆர்த்திக்கு நீதிபதி உத்தரவிட்டார். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பேச்சு வார்த்தை நடத்தினர். இந்த வழக்கின் விசாரணையை ஜனவரி 18ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.