பெங்களூர்: இன்ஸ்டாகிராமில் நேரலையின்போது ரசிகர்களின் அந்தரங்க கேள்விகளுக்கு நடிகை சைத்ரா ஆச்சார் சாதூர்யமாக அளித்த பதிலால், கேள்வி கேட்ட ரசிகர் அரண்டு போனார். நீங்கள் கேட்ட இந்த கேள்வியை உங்களது தாய் அல்லது தங்கையிடம் கேட்டு இருந்தால் அவர்கள் உங்களுக்கு நேரடியாகவே பதில் அளித்திருப்பார் என்று கூறியதுடன், மேலும் நடிகை சைத்ரா ஆச்சார் கூறியதுதான் ரசிகரை ஆடிப்போக வைத்துள்ளது.
கன்னட திரைஉலகில் பிரபல நடிகையாக இருந்து வரும் சைத்ரா ஆச்சார் தமிழில் நடிகர் சித்தார்த்துடன், பெயரிடப்படாத படம் ஒன்றி நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் அவ்வப்போது நேரலையில் தோன்றி ரசிகர்களிடம் கலந்துரையாடி வருகிறார நடிகை சைத்ரா ஆச்சார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேரலையில் தோன்றிய சைத்ரா ஆச்சார், ரசிகர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அதில் ஒரு ரசிகர், நடிகை சைத்ரா ஆச்சாரிடம் அந்தரங்க கேள்வி ஒன்று ஒன்று கேட்டார். நீங்கள் சினிமா வாய்ப்புக்காக யாரிடமாவது ‘அட்ஜஸ்ட்மென்ட்’ செய்தது உண்டா? என்று கேள்வி எழுப்பினார்.
அவரது கேள்விக்கு அதிரடியாக பதில் அளித்த நடிகை சைத்ரா ஆச்சார், ‘நான் தைரியமான பெண். எனக்குள் நடிப்பு திறமை உள்ளது. அதனால் நான் யாரிடமும் ‘அட்ஜஸ்ட்மென்ட்’ செய்து சினிமா வாய்ப்பு பெற வேண்டிய அவசியம் கிடையாது’ என்று காட்டமாக கூறினார். அதேபோல் இன்னொரு ரசிகரும் நடிகை சைத்ரா ஆச்சாரிடம் அந்தரங்க கேள்வி ஒன்றை கேட்டார். அதற்கு புத்திசாலித்தனமாக பதில் அளித்த நடிகை சைத்ரா ஆச்சார், ‘என்னிடம் நீங்கள் கேட்ட இந்த கேள்வியை உங்களது தாய் அல்லது தங்கையிடம் கேட்டு இருந்தால் அவர்கள் உங்களுக்கு நேரடியாகவே பதில் அளித்திருப்பார்கள். உங்களுக்கு சரியாக புரியவில்லை எனில் செயல்விளக்கம் கூட அளித்திருப்பார்கள்’ என்று தெரிவித்தார்.
நடிகையின் இந்த பதில்களாக உறைந்துபோன ரசிகர்கள் தொடர்ந்து அவரிடம் அதுபோன்ற கேள்விகளை கேட்பதை நிறுத்திவிட்டார். தற்போது நடிகை சைத்ரா ஆச்சாரின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. நடிகையின் இந்த தைரியமான பதில்களுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.