Bigg Boss Tamil Season 8 Day 85 மிகவும் எமோஷனலாக சென்றது. 75 நாட்கள் கடந்ததற்கு பிக் பாஸ் அனைவருக்கும் ஒரு கேக் துண்டை அனுப்பி நீங்கள் யாருக்கு கொடுக்க விரும்புகிறீர்கள் இந்த வீட்டில் யார் உங்களுக்கு நெருக்கமானவர்கள் என்பதை பற்றி பேச சொன்னார். அடுத்ததாக பெஸ்ட் பெர்பார்மர் ஒர்ஸ்ட் பெர்பார்மர் செலக்சன் சொன்னார் பிக் பாஸ்.
அதன்படி பெஸ்ட் பெர்பாமராக ஜெஃப்ரி பவித்ரா முத்துக்குமார் ஆகியோரும் ஒர்ஸ்டில் அன்சிகா சௌந்தர்யாவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அடுத்ததாக கேப்டன்சி டாஸ்க் நடைபெற்றது. அதில் முதலில் ஜெஃப்ரி வெளியேறிவிட்டார். அடுத்ததாக பவித்ரா விளையாடும் போது முத்துக்குமரன் அசால்டாக பவித்ரா ஜெயிப்பதற்கு விட்டது போல் இருந்தது.
பிக் பாஸ் மிகவும் கோபப்பட்டு முத்துக்குமரனை திட்டியதோடு இனிமேல் இந்த வாரம் கேப்டன்சி டாஸ்க் ரத்து செய்யப்படுகிறது என்று சொல்கிறார். மேலும் இனி நாமினேஷன் ப்ரீ பாஸ் கிடையாது என்றும் கூறினார். இதை தாங்கமுடியாத முத்துக்குமரன் உடைந்து கதறி அழுதுவிட்டார். வெகு நேரம் முத்துக்குமரன் பிக் பாஸிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டிருந்தார். எனக்கு தண்டனை கொடுங்கள் என்று கூறினார்.
பவித்ராவும் தனியாக முத்துக்குமரன் இப்படி இருப்பது பார்ப்பதற்கு கஷ்டமாக இருக்கிறது நீங்க அவரை கூப்பிட்டு ஏதாவது பேசுங்க என்று கூறினார். இருவரை பார்க்கவே பாவமாக மிகவும் எமோஷனலாக இந்த எபிசோடு சென்றது. முத்துக்குமரன் அழும் போது பார்வையாளர்கள் பலருக்கும் கண்ணீரே வந்துவிட்டது என்று சொல்லலாம். இனி அடுத்ததாக வார இறுதி எபிசோடு விஜய் சேதுபதி முத்துக்குமரனை வந்து திட்டுவாரா என்ன செய்யப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.