பெண்களின் பாதுகாப்பிற்காக அரசு பல முயற்சிகளும், எண்ணற்ற திட்டங்களைத் தீட்டினாலும் இன்னும் அவ்வப்போது நாட்டின் பல இடங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும், குற்றங்களும் நடைபெற்று வருகிறது. இதனால் பல ஆயிரக்கணக்கான பெண்கள் பாதிக்கப்பட்டாலும் ஒரு சிலரே தைரியமாக முன்வந்து தங்களுக்கு ஏற்பட்ட அநீதிகளுக்கு விடை காண்கின்றனர்.
சில பெண்கள் தைரியமாக தங்களுக்கு ஏற்படும் வன்முறைகளுக்கு பதில் கொடுக்கின்றனர். அப்படி ஒரு சம்பவம் புனேயில் நடக்க பாதிக்கப்பட்ட பெண் செய்த செயல் பல பெண்களுக்கு முன்னுதாரணமாக விளங்குகிறது.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் ஓடும் பேருந்தில் ஒரு பெண்ணிடம் அத்துமீறிய ஒருவனை அந்த இடத்திலேயே வெளுத்து வாங்கியிருக்கிறார் அப்பெண். புனேவில் உள்ள ஒரு பகுதியில் பஸ்ஸில் பயணம் செய்த ஒரு பெண்ணை இளைஞன் ஒருவன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டிருக்கிறான்.
இதுதான்யா கல்யாணச் சாவு..! 96 வயது பாட்டி மறைவை கொண்டாடிய பேரன் பேத்திகள்
அந்தப் பெண் பொங்கி எழுந்து அனைவரின் முன்னிலையிலும் அந்த இளைஞரின் சட்டையைப் பிடித்து கன்னத்தில் பளார் விட்டார். மேலும் அந்த இளைஞன் மன்னிப்புக் கேட்ட போதும் விடாத அப்பெண் தொடர்ந்து அவரை 26 முறை கன்னத்தில் பளார் விட பேருந்துப் பயணிகள் அதிர்ச்சியாகினர்.
இதுபோன்ற கொடுமைகளை அனுபவிக்கும் பெண்கள் மூடி மறைக்காமல் அந்த இடத்திலேயே பளார் விட்ட வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அப்பெண்ணுக்குப் பாராட்டுகளும், வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது. இதுபோன்று பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் இருந்து காக்க மத்திய, மாநில அரசுகள் பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன.
மகளிர் மட்டும் பேருந்து, பிங்க நிற பேருந்து, உதவி மைய எண், பெண் போலீஸ் காவலர் திட்டம், போக்சோ சட்டம் உள்ளிட்ட பல கடுமையான சட்டங்களைப் பின்பற்றிய போதும் இன்றும் இது போன்ற சம்பவங்கள் குறைந்தபாடில்லை. எனவே பெண்கள் இதுபோன்ற அநீதிகள் ஏற்பட்டால் தைரியமாக அந்த இடத்தில் எதிர்த்துப் போராட வேண்டும்என சமூக ஆர்வலர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
பெண்கள் அவசர உதவிக்கு 1098 அல்லது 100 என்ற எண்களுக்கு போன் செய்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.