மருத்துவத்துறையின் ஒரு மைல்கல்.. புற்றுநோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிப்பு.. ரஷ்யா ஆராய்ச்சியாளர்கள் சாதனை

நோய்களில் மிகவும் கொடிய நோயாக உலகம் முழுவதும் புற்றுநோய் அறியப்படுகிறது. இது அணுஅணுவாக சித்ரவதை செய்து உயிரைக் கொல்லும் பயங்கரமான நோயாகும். இந்நோய் வந்தால் வாழ்நாளை நீட்டிக்கலாமே தவிர முற்றிலும் குணப்படுத்த முடியாது. மேலும்…

Cancer Vaccine

நோய்களில் மிகவும் கொடிய நோயாக உலகம் முழுவதும் புற்றுநோய் அறியப்படுகிறது. இது அணுஅணுவாக சித்ரவதை செய்து உயிரைக் கொல்லும் பயங்கரமான நோயாகும். இந்நோய் வந்தால் வாழ்நாளை நீட்டிக்கலாமே தவிர முற்றிலும் குணப்படுத்த முடியாது.

மேலும் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதற்குரிய சிகிச்சை முறைகளால் பல்வேறு பக்கவிளைவுகளையும் சந்திக்கின்றனர். புற்றுநோய்களில் பல வகைகள் உண்டு. இரத்தப் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய், நுரையீரல் புற்று நோய், வாய்ப்புற்று நோய் என உடலின் அனைத்து பாகங்களிலும் ஏற்படுகிறது.

மரபு ரீதியாகவும், முறையற்ற பழக்கங்களாலும் புற்றுநோய் வருவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் உள்ளது. உயிர்க்கொல்லி நோயாக உலகமெங்கும் அச்சுறுத்தி வந்த புற்றுநோய்க்கு இதுவரை தடுப்பு மருந்துகள் கண்டறியப்படாமல் இருந்தது. மேலும் புற்று நோய்க்கான சிகிச்சையும் அதிக செலவினம் கொண்டதால் புற்று நோய் ஏற்பட்ட பலர் இளம் வயதிலேயே தங்கள் வாழ்க்கையை முடித்திருக்கின்றனர்.

இனி இதற்கெல்லாம் ஓர் விடிவு காலம் பிறக்கும் விதமாக பல ஆண்டுகளாக செய்யப்பட்ட ஆராய்ச்சியின் பயனாக புற்றுநோய்க்கு தடுப்பூசி கண்டறியப்பட்டுள்ளது.

மருத்துவத் துறையின் மகத்தான சாதனையாகக் கருதப்படும் இந்தக் கண்டுபிடிப்பினை செய்தவர்கள் ரஷ்ய ஆராய்ச்சியாளர்கள். ரஷ்யாவின் கமலேயா நேஷனல் ரிசர்ச் சென்ட்ர் ஃபார் எபிடெமியாலாஜி மற்றும் மைக்ரோ பயாலஜி தலைவர் டாக்டர் அலெக்சாண்டர் ஜின்ஸ்ட்ஸ்பர்க் தலைமையிலான குழுவினர் இத்தடுப்பூசியைக் கண்டறிந்துள்ளனர். இதன் மூலம் மருத்துவ வரலாற்றில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார்கள்.

இந்த மனநிலை இல்லாதவர்கள் பங்குச்சந்தைக்கு வரவேண்டாம்: ஆலோசகர்கள் கூறும் அறிவுரை..!

இந்தக் குழு கண்டறிந்த தடுப்பூசியானது மனித உடலில் செலுத்தப்படும் போது எம்.ஆர்.என்., அல்லது மெசன்சர் எம்.ஆர்.என்.ஏ, வகை தடுப்பு மருந்து நமது உடலில் வைரஸ் புரதத்தினை உருவாக்குகிறது. இப்புரதம் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியைத் தூண்டுகிறது. இந்த தடுப்பூசியை உருவாக்க அரைமணிநேரம் முதல் ஒருமணி நேரம் வரை ஆகிறது. மேலும் இத்தடுப்பூசி கணிதத்தின் மேட்ரிக்ஸ் முறையைப் பயன்படுத்தி உருவாக்கப்படுகிறது.

அடுத்த ஆண்டு முதல் இத்தடுப்பூசி உலகம் முழுக்க அறிமுகம் செய்யப்படும் என எதிர்பாக்கப்படுகிறது. மேலும் இந்த தடுப்பூசியானது புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவசமாக விநியோகிக்கபடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.