ஒவ்வொரு வங்கியும் மினிமம் பேலன்ஸ் என ஒரு தொகையை நிர்ணயம் செய்திருக்கும் நிலையில் அதற்கு மேல் உள்ள தொகைக்கு மிகவும் குறைந்த வட்டியே கிடைக்கும் என்பது தெரிந்தது. கிட்டத்தட்ட மூன்று சதவீத வட்டி மட்டுமே சேவிங் அக்கவுண்டுக்கு கிடைக்கும் என்பதால், தற்போது மினிமம் பேலன்ஸ்க்கும் அதிகமாக இருக்கும் தொகையை ஆட்டோமேட்டிக்காக FDக்கு மாற்றும் புதிய வசதியை ஒரு சில வங்கிகள் கொண்டு வந்துள்ளன.
உதாரணத்துக்கு, ஒரு வங்கியில் 10 ஆயிரம் ரூபாய் மினிமம் பேலன்ஸ் என வைக்கப்பட்டிருந்தால், உங்கள் அக்கவுண்டில் பத்தாயிரத்திற்கும் அதிகமாக இருந்தால், அதை உடனடியாக ஆட்டோ ஸ்வீப் வசதி மூலம் சேமிப்பு கணக்கில் இருந்து, கணக்கிற்கு FDக்கு மாற்ற முடியும். மினிமம் பேலன்ஸ்க்கு மேல் எவ்வளவு தொகை இருந்தாலும் அது FDக்கு மாற்றப்பட்டு உங்கள் கணக்கில் மினிமம் பேலன்ஸ் மட்டும் இருக்கும். அந்த FD தொகைக்கு கூடுதல் வட்டி கிடைக்கும்.
ஒரு வேளை, உங்கள் கணக்கில் மினிமம் பேலன்ஸ் குறைந்தால், FDயில் இருந்து தானாக டெபிட் செய்யப்பட்டு, மினிமம் பேலன்ஸ் சரி செய்யப்பட்டு விடும். இந்த வசதி காரணமாக, சேவிங்ஸ் அக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கு அதிக வட்டி மற்றும் லாபம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், மினிமம் பேலன்ஸ்க்கு மேல் இருக்கும் FD தொகையை நீங்கள் அவசர தேவைக்காக முன்கூட்டியே எடுத்தாலும், எந்த விதமான அபராத கட்டணம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வசதியை செயல்படுத்த வங்கியின் இணையதளம் அல்லது செயலியில் சென்று, நிலையான வைப்பு என்ற பகுதிக்கு சென்று ஆட்டோ ஸ்வீப் வசதியை தேர்வு செய்யலாம். அனைத்து வேலை நாட்களிலும் இந்த ஆட்டோ ஸ்வீப் வசதி செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.