ஆனால், நேற்று ஒரு சூப்பர் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி, அனைத்து பயனர்களும் ChatGPT Search அம்சத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, ChatGPT Search வசதியை அனைவரும் கூகிளுக்கு பதிலாக பயன்படுத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதில் எந்தவிதமான கேள்வியையும் கேட்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
டெக்ஸ்ட் ஆக மட்டும் கேள்வி கேட்பது மட்டும் இன்றி குரல் மூலமாகவும் கேள்வி கேட்கலாம் என்றும் நாம் கேட்கும் கேள்விக்கு டெக்ஸ்டில் பதில் வருவது மட்டுமின்றி அது சம்பந்தமான புகைப்படம் மற்றும் வீடியோக்களும் நமக்கு கிடைக்கும் வகையில் இந்த ChatGPT Search வடிவமைக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது