பச்சை குத்தும் வழக்கம் உலகம் முழுவதும் அன்று முதல் இன்று வரை தொடர்கிறது. தங்களுக்கு பிடித்தவர்களின் பெயர்கள், உருவங்கள், சின்னங்கள் போன்றவற்றை பச்சை குத்தி அன்பினை வெளிப்படுத்துவது வழக்கம். இந்த பச்சை குத்தும் வழக்கம் நாளடைவில் டாட்டூ என்று உருமாறி உடலெல்லாம் டிசைன் டிசைனாக கோலம் போடுவது போன்ற தோற்றங்களில் நாகரீகம் வளர்ந்தது. இதற்கென பயிற்சி பெற்ற டெக்னீஷியன்கள் முழுநேர தொழிலாகக் கொண்டு சம்பாதித்து வருகின்றனர்.
தற்போது இதற்கும் மேலாக பாடி மாடிபிகேஷன் என்னும் பெயரில் உடல் அங்கங்களை மாற்றி அமைக்கும் கலாச்சாரம் பெருகி வருகிறது. அப்படி தனது நாக்கினை இரண்டாகப் பிளந்து அதில் கலர் கலராக டாட்டூ குத்தியும் கண்களில் நீல நிற ஊசி செலுத்தி கண்ளை நீலமாக மாற்றி பாம்பு போல் தனது தோற்றத்தினை மாற்றி இளைஞர்களை தவறான வழியில் நடத்தியவர்தான் ஹரிஹரன். இவரை ஹரிஹரன் என்று சொன்னால் தெரியாது. ஏலியன் பாய் என்று இன்ஸ்டாகிராமில் தேடினால் இந்த டாட்டூ பாயின் அட்டகாசம் அதிர்ச்சி அடைய வைக்கிறது.
தந்தையை இழந்த 111 பெண்களுக்கு திருமணம் செய்து வைத்த வைர வியாபாரி.. நெகிழ்ச்சியான குஜராத்
இவருடைய இன்ஸ்ட்டா கணக்கில் கிட்டத்தட்ட ஒருலட்சம் பாலோயர்களுக்கு மேல் இருக்கிறார்கள். தனது டாட்டூ கடைக்கு வரும் நபர்களை வித்தியாசமான உடல் அங்கங்களை மாற்றுவதாகக் கூறி இதுவரை 4 பேருக்கு நாக்கு பிளவு அறுவை சிகிச்சை செய்திருக்கிறார். இவரின் அட்டகாசம் தாங்க முடியாத சமூக ஆர்வலர்கள் திருச்சி காவல்துறைக்குத் தெரிவிக்க ஏலியன் பாய் கடைக்கு ஆய்வு மேற்கொண்ட போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
அனுமதியின்றியும், முறையான பயிற்சி இன்றியும் நாக்கு அறுவை சிகிச்சை, டாட்டூ போன்றவை செய்வது தெரிய வந்தது. ஏலியன் பாய் மற்றும் அவரது நண்பர் ஆகியோரைக் கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை செய்ததில் உடலின் அந்தரங்க பாகங்களிலும் டாட்டூ வரைவார்களாம்.
இதற்காக ரூ. 50,000 வரை வாங்குவார்களாம். இவர்களின் மாத வருமானம் சுமார் 3 லட்சம் வரை இருக்குமாம். இப்படி முறைதவறி இளைஞர்களை டாட்டூ என்ற பெயரில் உடல் பாகங்களை அறுவை சிகிச்சை செய்து அதை விளம்பரப்படுத்தியதற்காக இவரது கடை ஊழியரான ஜெயராமன் என்பவரும் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கடைக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.