நம்மூர் பிக்பாஸ் போல சீனாவில் நடக்கும் சுய ஒழுக்கப் போட்டி.. செலவு செய்து ஏமாந்ததாக போட்டியாளர் புகார்

இந்தியாவில் பிக்பாஸ் போட்டிகள் இந்தியில் ஆரம்பித்து தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்பட பல மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. நெதர்லாந்தில் பிக் பிரதர் என்னும் பெயரில் ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக ஒளிபரப்பாகிய இந்நிகழ்ச்சி படிப்படியாக…

China Biggboss

இந்தியாவில் பிக்பாஸ் போட்டிகள் இந்தியில் ஆரம்பித்து தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்பட பல மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. நெதர்லாந்தில் பிக் பிரதர் என்னும் பெயரில் ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக ஒளிபரப்பாகிய இந்நிகழ்ச்சி படிப்படியாக உலகின் பல நாடுகளில் வெவ்வேறு வடிவம் கொண்டு ஒளிபரப்பாகி வருகிறது.

தமிழில் கமல்ஹாசன் சீசன் 7 வரை தொகுத்து வழங்கினார். தற்போது சீசன் 8 நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை 70 நாட்கள் நிறைவு பெற்றுள்ளது. ஹவுஸ் மேட்ஸ் எனப்படும் போட்டியாளர்கள் 100 நாட்கள் வெளி உலகத் தொடர்பின்றி ஒரே வீட்டில் வசிக்க வேண்டும். இங்கு இவர்களின் ஒழுக்கம், அணுகுமுறை தான் போட்டியே. இதில் ஒவ்வொரு பலபரீட்சையிலும் தேர்வாகும் நபர் இறுதியில் டைட்டில் வின்னர் பட்டம் வெல்கிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி எப்படி உலகம் முழுக்க பிரபலமாக இருக்கிறதோ அதேபோல் சீனாவிலும் இதே போன்ற ஒரு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. ஆனால் இங்கு வெறும் 26 நாட்கள் இருந்தால் போதும். இந்நிகழ்ச்சியில் சுய ஒழுக்கம் தான் போட்டியே. இதில் போட்டியாளர்கள் இதற்கென அமைக்கப்பட்ட இல்லத்தில் 26 நாட்கள் தங்க வேண்டும். இங்க இவர்களின் ஒழுக்கம் மதிப்பீடு செய்யப்பட்டு இறுதியில் வெல்லும் நபருக்கு பரிசுத் தொகையாக ரூ.1.1 கோடி தரப்படும். போட்டியாளர்கள் 24 மணிநேரமும் கேமரா மூலம் கண்காணிக்கப்படுவார்கள்.

எலான் மஸ்க் அறிமுகம் செய்யும் ‘X-Mail.. G-Mail’ க்கு பாதிப்பு ஏற்படுமா?

இதில் பங்கேற்ற ஒருவர் தற்போது இந்நிகழ்ச்சியை நடத்தும் நிறுவனத்தின் மீது வழக்குத் தொடர்ந்திருக்கிறார். ஏனெனில் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இவர் ரூ. 2.5 லட்சம் செலவு செய்திருக்கிறார். இருப்பினும் போட்டி நடக்கும் இல்லத்தில் இவரின் நடவடிக்கைகளைக் கண்காணித்து 3 முறை அந்நிறுவனம் வெளியேற்றியிருக்கிறது. இதனால் மன உளைச்சலான அவர் இப்போட்டியில் தன்னை ஏமாற்றி விட்டதாகக் கூறி வழக்குத் தொடர்ந்திருக்கிறார். கோடிகளைச் சம்பாதிக்க ஆசைப்பட்டு லட்சங்களை இழந்து தற்போது அவர் புலம்பித் தவிக்கிறார்.