பிவி சிந்துவுக்கு திருமணம்.. ஐடி மாப்பிள்ளையை கரம் பிடிக்கிறார்..!

  பிரபல பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்துவுக்கு திருமணம் நடைபெற இருப்பதாகவும், அவர் ஐடி துறை சேர்ந்தவரை கைப்பிடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து, இரண்டு முறை…

பி.வி. சிந்து

 

பிரபல பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்துவுக்கு திருமணம் நடைபெற இருப்பதாகவும், அவர் ஐடி துறை சேர்ந்தவரை கைப்பிடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து, இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்த நிலையில், தற்போது அவர் டிசம்பர் 22 ஆம் தேதி திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும், கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருமணம் நிச்சயதார்த்தம் நடந்ததாகவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

பிவி சிந்துவை திருமணம் செய்ய போகும் நபர் வெங்கட தத்தா சாய் என்பவர் என்றும், இவர் தகவல் தொழில்நுட்ப நிபுணர் என்றும் கூறப்படுகிறது. திருமண வரவேற்பு 24 ஆம் தேதி ஹைதராபாத்தில் நடந்த திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

திருமணம் முடித்த ஒரு சில நாட்களில் பிவி சிந்து, ஜனவரி 7 ஆம் தேதி தொடங்கும் மலேசியா ஓபன் போட்டியிலும் கலந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், பிவி சிந்து திருமணத்தில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.

திருமணம் முடிந்தவுடன் அவர் விரைவில் ஒலிம்பிக் போட்டிக்கும் தயாராக தனது பயிற்சி தொடங்குவார் என்று அவரது பயிற்சியாளர் தெரிவித்தார். திருமணம் நடந்தாலும் தனது விளையாட்டில் அவர் தொடர்ந்து கவனம் செலுத்துவார் என்றும், அவர் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தார்.