மகத்துவம் நிறைந்த மார்கழி மாத ராசி பலன்.. மகாவிஷ்ணுவின் அருள் பெறும் 4 ராசிக்காரர்கள்!

சென்னை: மார்கழி மாதத்தில் சூரியன் தனுசு ராசியில் பயணம் செய்வதால் தனுர் மாதம் என்று அழைக்கப்படுகிறது. குருவின் வீட்டில் சூரியன் பயணம் செய்யும் இந்த மாதத்தில் குரு ரிஷப ராசியிலும், செவ்வாய் கடக ராசியிலும்…

New Project 51

சென்னை: மார்கழி மாதத்தில் சூரியன் தனுசு ராசியில் பயணம் செய்வதால் தனுர் மாதம் என்று அழைக்கப்படுகிறது. குருவின் வீட்டில் சூரியன் பயணம் செய்யும் இந்த மாதத்தில் குரு ரிஷப ராசியிலும், செவ்வாய் கடக ராசியிலும் புதன் விருச்சிக ராசியிலும் சுக்கிரன் மகர ராசியிலும் சனி கும்ப ராசியிலும் ராகு மீன ராசியிலும் கேது கன்னி ராசியிலும் பயணம் செய்கின்றன. இந்த கிரகங்களின் பயணத்தால் மேஷம் முதல் கடகம் வரை யாருக்கு அதிர்ஷ்டம் தேடி வரும் என்று பார்க்கலாம்.

மேஷம்

செவ்வாயை ராசி அதிபதியாக பெற்றுள்ள மேஷ ராசி அன்பர்களே… ஆன்மீக அருள் நிறைந்த மாதம்.. அப்பா வழி சொந்தங்களால் அதிர்ஷ்டம் தேடி வரப்போகிறது. ஆலய தரிசனம் உங்கள் வாழ்க்கையில் அற்புத மாதங்களை ஏற்படுத்தும். தொழில்துறைக்கு தேவையான ஏற்பாடுகளை நண்பர்கள் மூலமாக செய்வீர்கள். ராசிக்கு பத்தாம் வீட்டில் சுக்கிரன் சஞ்சரிக்கிறார். தொழிலில் வெற்றியும் லாபமும் அதிகரிக்கும். இளைய சகோதர சகோதரிகளின் உதவி கிடைக்கும் நிறைய நல்ல விசயங்கள் நடக்கும். உங்களின் சக்தி அதிகரிக்கும். சுறுசுறுப்பு கூடும். செவ்வாய்கிழமை முருகப்பெருமானை வணங்கலாம்.

ரிஷபம்

சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷபராசி அன்பர்களே….
எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எந்த காரியத்திலும் இறங்காதீங்க. நுரையீரல் சம்பந்தப்பட்ட கோளாறு வராமல் எச்சரிக்கையாக இருங்க.
பணப்பிரச்சினை தீரும் கடன் பிரச்சினை குறைய வாய்ப்பு உள்ளது. வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும் வருமானம் கிடைக்கும். குடும்பத்தினர்களிடையே மதிப்பு மரியாதை கூடும். மனைவி ஏதாவது கோபத்தில் பேசினாலும் மனதில் வைத்துக் கொள்ளாதீர்கள். கூடிய வரை விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. மாதம் முழுவதும் வெள்ளிக்கிழமை அம்மன் கோவிலுக்கு சென்று விளக்கேற்றி வழிபடுங்கள் நன்மைகள் நடைபெறும்.

மிதுனம்

புதனை அதிபதியாகக் கொண்ட மிதுன ராசி அன்பர்களே… ஏழாம் வீட்டில் சூரியன் பயணம் செய்கிறார் சூரியனின் பார்வை உங்க ராசியின் மீது விழுவது ரொம்ப சிறப்பு. சக்தி நிறைந்த மாதம். நீங்கள் எடுக்கிற முயற்சிகளில் வெற்றிகள் தானாக தேடி வரும். மண வாழ்க்கையில் மகிழ்ச்சி கூடும். நீண்ட காலமாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். இந்த மாதம் உங்களுக்கு வெற்றிகள் கை மேல் கிடைக்கும். பெண்களுக்கு நீண்ட காலமாக ஆசைப்பட்ட பொருட்கள் கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். வேலைக்கு செல்பவர்களுக்கு சம்பள உயர்வு புரமோசன் கிடைக்கும். அரசு வேலைகள் தேடி வரும். வங்கிக்கடன் கிடைக்கும்.

கடகம்

சந்திரனை ராசி அதிபதியாகக் கொண்ட கடக ராசிக்காரர்களே.. பண விசயத்தில் சிக்கனம் தேவை. குடும்பத்தில் தேவையில்லாத செலவு ஏற்பட்டு கடன் வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவீர்கள். மார்கழி மாதத்தில் உங்களுக்கு நிறைய நன்மைகள் நடக்கும். நீங்க இழந்ததை திரும்ப பெறுவீர்கள். ஏழாம் வீட்டில் சுக்கிரன் இருப்பதால் கணவன் மனைவி உறவு பலமடையும். தங்க நகைகளை அடமானத்தில் இருந்து மீட்பீர்கள். குருவின் பயணத்தால் பாசிட்டிவ் எண்ணங்கள் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு வெற்றிகள் தேடி வரும். மேலும் நன்மைகள் அதிகரிக்க இந்த மாதம் புதன்கிழமை பெருமாளுக்கு துளசி மாலை வாங்கிக் கொடுத்து வழிபடுங்கள் நன்மைகள் நடைபெறும்.