Bigg Boss Tamil Season 8 Day 69: இதுவரை தமிழ் பிக் பாஸ் சரித்திரத்தில் நடக்காத ஒன்றை செய்து கெத்து காட்டிய விஜய் சேதுபதி….

Bigg Boss Tamil Season 8 Day 69 இல் எபிசோட் இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் பரபரப்புடன் சென்றது. முதலில் மேனேஜரில் பெஸ்ட் தேர்ந்தெடுக்கபட்டதை பற்றி விஜய் சேதுபதி பேசினார். அதில் ஜெஃப்ரிக்கு…

bigg boss

Bigg Boss Tamil Season 8 Day 69 இல் எபிசோட் இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் பரபரப்புடன் சென்றது. முதலில் மேனேஜரில் பெஸ்ட் தேர்ந்தெடுக்கபட்டதை பற்றி விஜய் சேதுபதி பேசினார். அதில் ஜெஃப்ரிக்கு நாமேஷன் ஃப்ரீ பாஸ் வழங்கப்பட்டது எப்படி எதற்காக என்பதை பற்றி பேசினார்.

bigg boss 57

அதில் ராணவ் உண்மையை போட்டு உடைத்து விட்டார். அருண் மற்ற எல்லாரும் சேர்ந்து ஜெஃப்ரிக்கு இந்தா கப்பு வச்சுக்கோங்க என்கிற மாதிரி எடுத்து குடுத்துறாங்க. அவனுக்கு எல்லாமே ஈசியா கிடைக்குது என்று உடைத்து விட்டு பேசி விட்டார். அது உண்மைதான்.

விஜய் சேதுபதியும் புரிய வைக்க முயற்சி செய்தார். ஜெப்ரியிடம் அரசியல் நம்மை சுற்றியும் நடக்கும் நம்மை வைத்தும் நடக்கும். நீ நாமினேஷன் பிரீ பாஸ் வாங்க தாகுதி இல்லனா வேண்டாம்னு தானே சொல்லி இருக்கணும் என்று கேட்டார். உண்மையிலேயே ஜெஃப்ரி சத்யா அருண் இருவரிடம் நன்றாக பழகியதால் தான் அவருக்கு நாமேஷன் பிரீ பாஸ் கிடைத்தது. மற்றொன்று அருணுக்கு மஞ்சரிக்கு போய் விடக்கூடாது என்ற எண்ணத்தினாலும் கொடுத்து விட்டார்கள்.

அடுத்ததாக நடந்ததுதான் ஹைலைட்டான விஷயம். தீபக் லேபர் ஓரியண்டட் ஸ்கில் ஓரியண்டட் என்ற வார்த்தை பயன்படுத்தியதை அருண் மிகப்பெரிய பிரச்சினையாக கடந்த வாரத்தில் ஏற்படுத்தியிருந்தார். அதை வைத்து தான் முழு எபிசோடும் போனது. அருணின் எண்ணங்கள் தப்பு அப்படி நினைப்பது தப்பு லேபர் ஒன்னும் அவ்வளவு தரக்குறைவான வார்த்தை கிடையாது என்பதை விஜய் சேதுபதி திரும்பத் திரும்ப ஆணித்தனமாக பல விஷயங்களை எடுத்துக்காட்டி சொல்லிக் கொண்டிருந்தார்.

மற்ற ஹவுஸ்மேட்ஸ்களிடமும் இதைப் பற்றிய கருத்துக்கள் கேட்டார். அனைவருமே அருண் செய்தது தான் தப்பு அவர்தான் ஓவராக செய்துவிட்டார் என்று கூறினர். அருணால் பதில் சொல்லவும் முடியவில்லை தான் செய்யது தப்பு என்ற ஒத்துக் கொள்வதற்கான பண்பு அவரிடமும் இல்லை. இறுதியாக எபிசோடில் பேசி முடிந்தவுடன் நடந்ததுதான் மிகப்பெரிய விஷயம். இதுவரை தமிழ் பிக் பாஸ் வரலாற்றிலேயே நடக்காத ஒரு நிகழ்வு என்று சொல்லலாம்.

ஏனென்றால் எபிசோடு முடிந்து போனவுடன் மறுபடியும் அருண் விஜய் சேதுபதி மீது பழி போடுவது போல் பேசிக் கொண்டிருந்தார். விஷால் எவ்வளவோ அவருக்கு புரிய வைக்க முயற்சி செய்து கொண்டிருந்தார். அந்த நேரத்தில் மைக்கில் வீட்டுக்குள்ளே பேசினார் விஜய் சேதுபதி. நன்றாக அருணை வச்சு செய்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். இறுதியில் ஒரு வார்த்தை சொன்னார் அதுதான் இருப்பதிலேயே அருணை செருப்பால் அடித்தது போல் இருந்தது.

bigg boss 58

அது என்னவென்றால் ஒரு விஷயத்தை நாம் பேசி முடித்து விட்டோம். அதற்கும் மேலே இல்லை இல்லை என்று பேசிக் கொண்டே போனால் அதில் முன்னேற்றம் நிகழாது. இவ்வளவு தூரம் பேசின பிறகு நான் சொன்னது தான் கரெக்ட்டுனு நீங்க நிரூபிச்சு என்ன பண்ண போறீங்கன்னு எனக்கு தெரியல என்று கூறினார். இதுதான் இருப்பதிலேயே ஹாட் சீட்டில் இருப்பது போல் இருந்தது. பார்வையாளர்களுக்கு விஜய் சேதுபதி நடந்து கொண்ட விதமும் எபிசோடும் மக்கள் வெகுவாக பாராட்டி வருகிறார்கள். இன்றைய எபிசோடில் சத்யா மிகவும் சந்தோஷமாக இருட்டாகி வெளியே சென்று விட்டார். அடுத்த எபிசோடில் தர்ஷிகா தான் எலிமினேட் ஆவார் என்று கூறப்படுகிறது. என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.