அமரன் திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை அடுத்து சிவகார்த்திகேயன் Tier 1 ஹீரோக்கள் லிஸ்ட்டில் இணைந்து விட்டார். இதுவரை அவர் நடித்த படங்களில் அமரன் படம் ரூ. 320 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டி சாதனை படைத்திருக்கிறது. இதனால் சிவகார்த்திகேயன் மார்க்கெட் தற்போது உச்சத்தில் உள்ளது.
தற்போது சிவகார்த்திகேயன் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அவருக்கு 23-வது படமாகும். இப்படம் முடிந்தவுடன் அடுத்ததாக டான் படத்தின் மூலம் வெற்றியைக் கொடுத்த சிபி சக்கரவர்த்தியுடன் மீண்டும் இணைகிறார். இப்படி அடுத்தடுத்து அப்டேட்கள் இருக்க தற்போது மெகா அப்டேட் ஒன்று அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது.
கோவையில் சூர்யா-திரிஷா கூட்டணி! ரசிகர்களை மகிழ்ச்சி கொடுத்த படப்பிடிப்பு
டான் பிக்சர்ஸ் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கும் இரண்டாவது படம் சிவகார்த்திகேயனின் 25-வது படமாக உருவாக உள்ளது. இப்படத்தினை சூரரைப்போற்று இயக்குநரான சுதா கொங்கரா இயக்குகிறார். மேலும் சிவகார்த்திகேயனுடன் ஜெயம் ரவி, அதர்வா ஆகியோரும் நடிக்கின்றனர்.
ஏற்கனவே ஜெயம் ரவி சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிக்கிறார் என்று செய்திகள் உலாவந்த நிலையில் தற்போது அதனை உறுதிப்படுத்தும் விதமாக இன்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் இவர்களுடன் ஸ்ரீலீலா, செல்வி ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர்.
ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கும் இப்படத்திற்கு ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படம் ஜி.வி.பிரகாஷ்குமாருக்கு 100-வது படமாகும். சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் தனி ஹீரோவாக நடிக்காமல் கதைக்காக சிறந்த கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து மல்டி ஸ்டார் படங்களில் படங்களில் நடித்து வருவது ஆரோக்கியமான சூழலுக்கு வித்திட்டுள்ளது.