இந்நிலையில், எஸ்ஐபி முதலீட்டுத் திட்டத்தில் மாதந்தோறும் மட்டும் முதலீடு செய்ய முடியுமா அல்லது தினசரி, வாரம், 15 நாட்களுக்கு ஒருமுறை முதலீடு செய்ய முடியுமா என்ற கேள்வி பலரின் மனதில் எழுந்துள்ளது. சிலருக்கு தினந்தோறும் சம்பளம் கிடைக்கும் சூழல் இருக்கும். அவர்கள் ஒரு மாதத்திற்குத் தேவையான எஸ்ஐபி முதலீட்டு தொகையை சேர்த்து வைப்பதில் சிரமத்தை எதிர்கொள்ளலாம். இவ்வகையினருக்கு தினசரி அல்லது வாராந்திர முதலீடு செய்யும் வாய்ப்புகள் இருக்கும்.
தினசரி அல்லது வாராந்திர சேமிப்பு விரும்புவோருக்கு ஆலோசகர்கள் வழிவகை காட்டுகின்றனர். எஸ்ஐபி முதலீடு வாரத்தில் 6 வணிக நாட்கள், ஒவ்வொரு வாரம் அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை முதலீடு செய்யும் சலுகையை வழங்குகிறது. இதனால் மாதாந்திர முதலீடு செய்ய முடியாதவர்களுக்கும் முதலீட்டு வாய்ப்பு கிடைக்கிறது.
அதே நேரத்தில் தினந்தோறும் சேமிக்கப்படும் எஸ்.ஐ.பியில், வங்கியில் ஒரு நாள் பணம் இல்லாமல் எஸ்ஐபி செக் திரும்பிவிட்டால், 500 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்பதால் அதில் கவனமாக இருக்க வேண்டும். தினசரி, வாரம் அல்லது பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை முதலீடு செய்யும் முறைகள் இருப்பினும், மாதந்தோறும் முதலீடு செய்வது ஒருவகையில் பாதுகாப்பான வழியாக கருதப்படுகிறது.