ஏஐ மீது வழக்கு தொடர்ந்த பெற்றோர்கள்.. குழந்தைகளை கெடுப்பதாக குற்றச்சாட்டு..!

  அமெரிக்காவில் இரண்டு குழந்தைகள் தங்கள் குழந்தைகளை ஏஐ கெடுப்பதாக கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏஐ டெக்னாலஜி என்பது இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டபோதில் போதிலும் சில சமயம் தவறான…

AI technology 1

 

அமெரிக்காவில் இரண்டு குழந்தைகள் தங்கள் குழந்தைகளை ஏஐ கெடுப்பதாக கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏஐ டெக்னாலஜி என்பது இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டபோதில் போதிலும் சில சமயம் தவறான தகவல்களை கூறுவதால் சிக்கல் ஏற்பட்டுகிறது. அந்த வகையில் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் ஏஐ இடம் தனது பெற்றோர் குறைவான நேரம் தன்னை மொபைல் பார்க்க அனுமதிப்பதாக புகார் அளித்துள்ளார்.

அதற்கு பதில் அளித்த ஏஐ ’சில நேரங்களில் குழந்தைகள் மனரீதியான துன்புறுத்தலுக்கு பிறகு பெற்றோரை கொலை செய்ததாக செய்திகள் பார்க்க முடிகிறது’ என்று பதில் அளித்துள்ளது. இதை பார்த்த அந்த சிறுவன் அதிர்ச்சி அடைந்துள்ளான். தன் பெற்றோர் மீது புகார் கூறிய நிலையில் பெற்றோரையே கொலை செய்யும் வகையில் பதில் அளித்துள்ளது என்பதுதான் அந்த அதிர்ச்சிக்கு காரணம்.

அதே போல் 9 வயது பெண் குழந்தை ஏஐ இடம் சில தகவல்களை பரிமாறிக் கொண்டிருந்தபோது திடீரென பாலியல் தொடர்பான புகைப்படங்களை காட்டி உள்ள.து இதனால் அந்த குழந்தை மனதளவில் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த இரண்டு குழந்தைகளின் பெற்றோர்களும் ஏஐ மீது வழக்கு தொடர்ந்து உள்ள நிலையில் அவர்கள் தங்கள் மனுவில் குழந்தைகளை ஏஐ கெடுப்பதாகவும், துன்புறுப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கின் முடிவை பொறுத்துதான் ஏஐ எதிர்காலம் இருக்கும் என்று கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.