அல்லு அர்ஜுனுக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல்.. நாம்பள்ளி நீதிமன்றம் உத்தரவு

தெலுங்கு சூப்பர் ஸ்டார் அல்லு அர்ஜுனுக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் விதித்து நாம்பள்ளி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 5-ம் தேதி புஷ்பா 2 தி ரூல் திரைப்படம் வெளியாகி உலகம் முழுவதும் வசூல்…

Allu Arjun Arrest

தெலுங்கு சூப்பர் ஸ்டார் அல்லு அர்ஜுனுக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் விதித்து நாம்பள்ளி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 5-ம் தேதி புஷ்பா 2 தி ரூல் திரைப்படம் வெளியாகி உலகம் முழுவதும் வசூல் மழை பொழிந்து கொண்டிருக்கிறது. கடந்த இரு நாட்களுக்கு முன்பே இப்படம் ரூ. 1000 கோடி வசூலைத் தாண்டியது. இதன் மூலம எந்த ஒரு இந்திய நடிகரும் செய்யாத சாதனையை அல்லு அர்ஜுன் செய்தார். இருப்பினும் நேற்று 1000 கோடி வசூல் என்பது உங்கள் அன்பு தான். விரைவிலேயே இந்தச் சாதனையை மற்றொரு படம் முறியடிக்க வாழ்த்துக்கள் என்று பெருந்தன்மையாகக் கூறினார் அல்லு அர்ஜுன்.

இந்நிலையில் புஷ்பா படத்தின் முதல்நாள் முதல் காட்சியைக் காண ஐதராபாத்தில் உள்ள சந்தியா என்ற திரையரங்கிற்கு திடீர் விசிட் அடித்தார் அல்லு அர்ஜுன். இதனால் அங்கு அவரைப் பார்க்க கட்டுக் கடங்காத கூட்டம் மொய்த்தது. சொல்லாமல் அல்லு அர்ஜுன் வந்ததால் பாதுகாப்பிற்கு நின்ற போலீசார் செய்வதறியாது திணறினர். இதனால் அங்கு தள்ளு முள்ளு ஏற்பட்டது. அப்போது நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் உயிரிழந்தார். மேலும் பலர் காயமடைந்தனர். ரேவதியின் மகனும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

திண்டுக்கல் தனியார் மருத்துவமனை தீ விபத்து பலி.. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 3 லட்சம் நிதியுதவி

இறந்த ரேவதியின் குடும்பத்திற்கு அல்லு அர்ஜுன் 25 லட்சம் இழப்பீடு வழங்குவதாக உறுதியளித்தார். மேலும் நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பும் கேட்டார். இந்நிலையில் ரேவதியின் குடும்பத்தார் காவல் துறையில் புகார் அளிக்க இன்று வீட்டில் இருந்த அல்லு அர்ஜுனை திடீரென போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கு என்ன நடக்கிறது என்று தெரியாமல் ஒருகணம் திகைத்தனர். இருப்பினும் அல்லு அர்ஜுன் நிலைமையை புரிந்து காவல்துறையினருக்கு ஒத்துழைப்புக் கொடுத்து அவருடன் சென்றார்.

அவரை நாம்பள்ளி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திdர் காவல் துறையினர். வழக்கினை விசாரித்த நீதிபதி அல்லு அர்ஜுனை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். அவர்மீது இரு வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இச்சம்பவம் தென்னிந்தியத் திரையுலகில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. அல்லு அர்ஜுனுடன் தியேட்டர் மேனேஜர் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.