நேற்று திடீரென ChatGPT செயலிழந்ததால் ஏராளமான பணிகள் பாதிக்கப்பட்டன. பின்னர், சேவைகள் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தபோது, “ChatGPT ஏன் டவுன் ஆனது ஏன்?” என பலரும் கேள்வி எழுப்பினர். அதற்கு சுவாரசியமான பதில்கள் வெளிவந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ChatGPT தொழில்நுட்பம் இன்று தவிர்க்க முடியாத ஒரு அங்கமாக மாறியுள்ளதால், அதை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
ChatGPT தொழில்நுட்ப அடிப்படையிலான பல நிறுவனங்கள் இயங்கும் நிலையில், திடீரென அது செயலிழந்தது பல வேலைகளை ஸ்தம்பிக்கச் செய்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ஆனால், ஒரு சில மணி நேரங்களில் சேவை மீண்டும் இயல்பு நிலைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
காலையில் 7 மணியளவில் உலகளவில் ChatGPT செயலிழந்ததாகவும், தொழில்நுட்ப வல்லுநர்கள் விரைந்து செயல்பட்டு சேவையை சரி செய்ததாகவும் ஓபன்ஏஐ அதிகாரபூர்வ பக்கங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், “ChatGPT ஏன் டவுன் ஆனது?” என்று கேள்வி எழுந்தது. அதற்கு ஓபன்ஏஐ, “டிசம்பர் 12 ஆம் தேதி ChatGPT செயலிழந்தது உண்மைதான்; உலகளவில் இதனால் பாதிப்பு ஏற்பட்டது. மேலும், தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாகவே இது நிகழ்ந்தது என்றும், அதை சரிசெய்தோம் என்றும் விளக்கமளித்துள்ளது. தொடர்ந்து சிக்கல்கள் ஏற்பட்டால், அதிகாரபூர்வ பக்கங்களில் தகவல் தெரிவிக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளது.
இன்றைய உலகில், சமூக வலைதளங்களும் செல்போன்களும் அவ்வப்போது செயலிழக்கின்றன. இதேபோல, ChatGPT செயலிழந்ததாலும் பொதுமக்கள் பலர் அவதியுற்றனர். இது சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுவும் தொழில்நுட்ப சிக்கலின் ஓர் விளைவாகவே கருதப்படுகிறது.