உலக செஷ் சாம்பியன் தொடர் சிங்கப்பூரில் நடைபெற்று வந்தது. இன்று நடைபெற்ற இறுதிச் சுற்றில் நடப்பு உலக சாம்பியனான சீனாவின் டிங் லிரெனுடன் மோதினார் கிராண்ட் மாஸ்டர் தமிழக வீரர் குகேஷ். விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் இறுதியில் சாம்பியன் பட்டத்தை வென்று வரலாறு படைத்திருக்கிறார் குகேஷ். முன்னதாக 14 சுற்றுகளில் இவர்கள் இருவருமே மோதினார்கள். அதில் இருவருமே தலா இரண்டு சுற்றுகளில் வெற்றிபெற்றிருந்தனர். மற்ற சுற்றுக்கள் அனைத்தும் டிராவில் முடிந்தது.
கடைசி சுற்றுப் போட்டி இன்று நடைபெற்றது. ஏற்கனவே இருவருமே 6.5 புள்ளிகள் பெற்று சமநிலையில் இருந்த நிலையில் உலக சாம்பியன் பட்டத்தினை மீண்டும் டிங் லிரென் தக்க வைப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்திய வீரர் குகேஷ் கருப்புநிற காய்களை தேர்ந்தெடுத்து விளையாடினார். இறுதிச் சுற்றில் வெற்றி பெறுபவருக்கு உலக சாம்பியன் பட்டம் என்ற நிலையில் ஆட்டம் சூடு பிடித்தது.
மாறாத அதே வேக டான்ஸ்.. பழைய சூப்பர் ஸ்டாரை கண்முன் கொண்டுவந்த கூலி அப்டேட்..
மேலும் இந்தச் சுற்றும் டிராவில் முடிவடைந்தால் அதி வேகமாக காய்களை நகர்த்தும் முறையில் விளையாடி அதில் வெற்றியாளரைத் தேர்வு செய்வர். இருவருமே தங்கள் திறமைகளை அடுத்தடுத்து வெளிப்படுத்தியதால் ஆட்டம் டிராவினை நோக்கிச் செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் 58-வது நகர்த்தலில் டிங் லிரோனை வீழ்த்தி உலக சாம்பியன் பட்டத்தினை தனது வசமாக்கினார் குகேஷ். 18 வயதே ஆன குகேஷுக்கு பரிசுத் தொகை மட்டும் சுமார் 20.8 கோடி கிடைக்கும்.
பொழுதுபோக்காக விளையாடத் தொடங்கி பின் சதுரங்க ஆட்டத்தில் ஆர்வம் ஏற்பட்டு, சிறு வயதிலிருந்தே விளையாடி வரும் குகேஷின் தந்தையும், தாயும் மருத்துவர்கள். குகேஷுக்காக தனது மருத்துவர் பணியைத் துறந்து அவருக்காக உறுதுணையாக இருக்கிறார் தந்தை. நாடு முழுவதிலுமிருந்து குகேஷுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் இருக்கிறது.