சென்னை: சென்னை வேளச்சேரியில் இன்று அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது. இந்த கன மழையின் காரணமாக ரயில் நிலையத்தை ஒட்டியுள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மேம்பாலங்களில் தங்கள் கார்களை நிறுத்தி வைத்து வருகிறார்கள்.. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
சென்னைக்கும் மழைக்கும் எப்போதுமே ஆகாது . விவேக் சொல்வது சென்னைக்கு தண்ணீரில் தான் கண்டமாக உள்ளது. மற்ற மாவட்டங்களில் 40 செமீ மழை பெய்தாலும் ஒன்றும் ஆகாது. ஏன் பள்ளிகளுக்கு கூட விடுமுறைவிடுவது கேள்விக்குறி தான்.. ஆனால் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் 10 செமீ மழை பெய்தால் கூட கண்டிப்பாக சிக்கல் தான் வருகிறது. ஏரி, குளங்களையும் ஆக்கிரமித்து வீடு கட்டிவிட்டதால் நிலைமை மோசமாக உள்ளது.
அரசு மின்சாரமும், குடிநீர், வடிகால் வசதி என எல்லாமே செய்து கொடுத்து அனுமதியும் கொடுத்துவிட்ட நிலையில் வெள்ள பாதிப்பு காரணமாக மோசமான பாதிப்பு ஏற்படுகிறது. இப்படி பாதிப்பு ஏற்படுவது எங்கு அதிகம் என்றால் .. வேளச்சேரி, பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், பெரும்பாக்கம், காரப்பாக்கம், பெருங்குடி, துரைப்பாக்கம் உள்ளட்ட பகுதிகள் தான். இந்த பகுதிகள் எல்லாம் ஒரு காலத்தில் பள்ளிக்கரணை ஏரியாகவும், வேளச்சேரி ஏரியாவும், மடிப்பாக்கம் ஏரியாகவும் இருந்தன.
கடந்த சில வாரம் முன்பு பெஞ்சல் புயல் காரணமாக கனமழை பெய்தது. அப்போது, வேளச்சேரி, மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, பெரும்பாக்கம், கோவிலம்பாக்கம்,கீழ்கட்டளை, துரைப்பாக்கம், தரமணி, பெருங்குடி உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பலஇடங்களில் சாலைகளே தெரியாதஅளவிற்கு தண்ணீர் ஆக்ரோஷமாக இருந்தது. இதனால் மக்கள் முன்னெச்சரிக்கையாகதங்கள் கார்களை வேளச்சேரி மேம்பாலத்தில் நிறுத்த தொடங்கினார்கள். இயல்பு நிலை திரும்பிய பிறகே மக்கள் கார்களை எடுத்து சென்றார்கள்.
இந்நிலையில் சென்னை வேளச்சேரியில் இன்று அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது. இந்த கன மழையின் காரணமாக ரயில் நிலையத்தை ஒட்டியுள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மேம்பாலங்களில் தங்கள் கார்களை நிறுத்தி வைத்து வருகிறார்கள். சென்னை வேளச்சேரியில் கனமழை காரணமாக குபேரன்நகர் எல்ஐசி நகர் ஏஜிஎஸ் காலனி ஆகிய பகுதிகளில் கார்கள் வைத்திருக்கும் நபர்கள் தங்களது வாகனங்களை பாதுகாத்துக் கொள்ள வேளச்சேரியின் மேம்பாலத்தின் மீது நிறுத்தி வருகின்றனர்.