லோன் கேட்டதுக்கு வித்தியாசமாக லஞ்சம் வாங்கிய மேலாளர்..விவசாயிக்கு இப்படி ஓர் நிலைமையா?

பொதுவாக அரசுத் துறைகளில் ஏதாவது ஒரு காரியம் விரைவாக நடைபெற வேண்டுமென்றால் அது லஞ்சம் இல்லாமல் கதையாகாது. லஞ்சம் தவிர்.. நெஞ்சம் நிமிர் என்ற போர்டுகள் வைத்தாலும் அது பெயரளவு மட்டுமே இருக்கிறது. லஞ்ச…

Loan

பொதுவாக அரசுத் துறைகளில் ஏதாவது ஒரு காரியம் விரைவாக நடைபெற வேண்டுமென்றால் அது லஞ்சம் இல்லாமல் கதையாகாது. லஞ்சம் தவிர்.. நெஞ்சம் நிமிர் என்ற போர்டுகள் வைத்தாலும் அது பெயரளவு மட்டுமே இருக்கிறது. லஞ்ச ஒழிப்புத்துறையும் பல்வேறு வகைகளில் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளைக் கையும் களவுமாகப் பிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறது. முதலில் பணமாக லஞ்சம் வாங்கிக் கொண்டிருந்தவர்கள் இப்போது கூகுள் பே, போன் பே ஆகிய டிஜிட்டல் முறைகளிலும், பொருட்களாகவும் லஞ்சம் பெறுகின்றனர்.

அந்த வகையில் ஒரு வங்கி மேலாளர் விவசாயி ஒருவர் விண்ணப்பித்த கடனுக்காக அவரிடம் வித்தியாசமான முறையில் லஞ்சம் கேட்டு தற்போது மாட்டியிருக்கிறார். சத்தீஸ்கர் மாநிலத்தின், மஸ்தூரி நகரில் தனது கோழிப் பண்ணையை விரிவாக்கம் செய்ய லோன் கேட்டு விவசாயி ரூப்சந்த் மன்ஹர் என்பவர் அருகில் உள்ள எஸ்பிஐ வங்கிக்குச் சென்றிருக்கிறார்.

அப்போது அங்கிருந்த மேலாளர் உங்களுக்கு லோன் ஏற்பாடு செய்து தருகிறேன். ஆனால் அதில் எனக்கு 10% கமிஷன் தரவேண்டும் என்று கேட்டிருக்கிறார். சொன்னபடி விவசாயி லோனுக்காக 10% கமிஷன் தொகையை மேலாளரிடம் கொடுத்திருக்கிறார். அதன்பிறகு அவர் கேட்டது தான் ஹைலைட்டே. விவசாயி அவர் வளர்த்து வந்த நாட்டுக்கோழியை கேட்டிருக்கிறார். என்னடா இது? இது புது லஞ்சமா இருக்கே என விவசாயி புலம்பிக்கொண்டே ஒவ்வொரு சனிக்கிழமையும் நாட்டுக்கோழியை மேலாளருக்கு கொடுத்திருக்கிறார்.

கூகுள் ட்ரெண்ட்ஸ் 2024.. அதிகம் தேடப்பட்ட திரைப்படங்கள் பட்டியலில்.. 2 தமிழ் படங்களுக்கு கிடைத்த கவுரவம்..

நாட்டுக் கோழியின் சுவையில் மயங்கிய மேலாளர் விவசாயிக்கு லோன் தராமல் இழுத்தடித்துக் கொண்டே இருந்தார். ஒருகட்டத்தில் விவசாயி பொங்கி எழுந்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து இதுவரை சுமார் ரூ.39,000 மதிப்பிலான நாட்டுக் கோழிகளை வாங்கி ஏப்பமிட்ட வங்கி மேலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளார். மேலும் தனக்கு லோன் வழங்க வேண்டுமென்றும், தன்னிடம் வாங்கிய கமிஷன் தொகையையும், நாட்டுக் கோழிக்கான பணத்தினையும் திருப்பத் தர வேண்டும் என்று அந்த விவசாயி வங்கியை முற்றுகையிட்டிருக்கிறார்.