கூகுள் ட்ரெண்ட்ஸ் 2024.. அதிகம் தேடப்பட்ட திரைப்படங்கள் பட்டியலில்.. 2 தமிழ் படங்களுக்கு கிடைத்த கவுரவம்..

நமக்கு ஏதாவது ஒரு விஷயம் தெரிய வேண்டும் என்றாலோ அல்லது ஒரு சம்பவம் தொடர்பாக ஏதேனும் தகவலை சேகரிக்க வேண்டும் என்றாலோ நிச்சயம் உடனடியாக செல்லும் தளம் என்றால் அது கூகுள் தான். அதற்கு…

Top Tamil Movies 2024

நமக்கு ஏதாவது ஒரு விஷயம் தெரிய வேண்டும் என்றாலோ அல்லது ஒரு சம்பவம் தொடர்பாக ஏதேனும் தகவலை சேகரிக்க வேண்டும் என்றாலோ நிச்சயம் உடனடியாக செல்லும் தளம் என்றால் அது கூகுள் தான். அதற்கு நிகராக வேறு பல தளங்கள் இருந்தாலும் google நமக்கு கொடுக்கும் ஆதாரங்களை போல மற்ற எந்த தளங்களாலும் அதனை மேற்கொள்ள முடியாது.

நடிகர்கள், நடிகைகள், உணவு வகைகள், விளையாட்டு தொடர்பான தகவல்கள் என நமக்கு எது தேவைப்பட்டாலும் அல்லது மற்ற மொழி தொடர்பாக ஏதாவது தகவல்களை சேகரிக்க நினைத்தாலும் கூகுள் அதற்கான ஒரு எளிய ஒரு ஃபிளாட்பார்மாகவும் இருந்து வருகிறது. இப்படி மிக முக்கியமான ஒரு தளமாக பலரது வாழ்வில் இருக்கும் கூகுளில் ஒவ்வொரு நாளும் பல கோடிக்கணக்கான மக்கள் பலவிதமான விஷயங்களை தேடி வருகின்றனர்.

கூகுள் ட்ரெண்டிங் படங்கள்

அந்த வகையில் தற்போது 2024 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்துள்ளதால் இந்த ஆண்டு அதிகம் தேடப்பட்டுள்ள விஷயங்கள் தொடர்பான தகவல்களையும் கூகுள் வெளியிட்டிருந்தது. இதில் அதிகம் தேடப்பட்ட விளையாட்டு வீரர்கள், அதிகம் தேடப்பட்ட மீம்ஸ்கள், அதிகம் தேடப்பட்ட உணவு வகைகள் என அனைத்திலும் ட்ரெண்டிங்கில் இருந்த டாப் 10 விஷயங்கள் பட்டியலை கூகுள் வெளியிட்டுள்ளது.

அந்த வகையில், 2024 ஆம் ஆண்டு அதிகம் கூகுளில் தேடப்பட்டு ட்ரெண்டிங்கில் இருந்த டாப் 10 இந்திய திரைப்படங்கள் எது என்பதையும் அவர்கள் தற்போது வெளியிட்டுள்ளனர். அந்த வகையில், இந்த பட்டியலில் முதலிடத்தை ஹிந்தி திரைப்படமான ‘Stree 2’ பிடித்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவான கல்கி 2898 AD படமும், மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தில் முறையே 12th Fail மற்றும் லப்பாட்டடா லேடீஸ் என்ற ஹிந்தி திரைப்படங்களும் பிடித்துள்ளது.
Maharaja Most Searched Tamil Movie in Google

தொடர்ந்து ஐந்தாவது இடத்தில் பேன் இந்தியன் திரைப்படமாக உருவான ஹனுமான் தெலுங்கு படம் உள்ளது. முதல் 5 இடங்களில் ஹிந்தி படங்களுடன் தென் இந்திய திரைப்படங்களும் இடம்பிடித்துள்ளது. ஆனால், அடுத்த ஐந்து இடங்களை முழுக்க முழுக்க தென் இந்திய திரைப்படங்கள் தான் ஆக்கிரமித்துள்ளது. 10 வது இடத்தில் பகத் பாசிலின் ஆவேசம் திரைப்படமும், 9 வது இடத்தில் பிரபாஸின் சலார் திரைப்படமும் அதிகம் கூகுளில் தேடப்பட்ட படங்களாக உள்ளது.

கோட், மகாராஜாவுக்கு கிடைத்த கவுரவம்

இதற்கடுத்து 8 வது இடத்தை விஜய் நடிப்பில் உருவான கோட் திரைப்படம் பிடித்துள்ள நிலையில், 7 வது இடத்தில் மஞ்சும்மல் பாய்ஸ் மற்றும் 6 வது இடத்தில் விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படமும் உள்ளது.
Vijay Goat Search in Google

மற்ற தென் இந்திய மொழிகள் மற்றும் ஹிந்தி படங்கள் அதிகம் ஆக்கிரமித்த கூகுள் ட்ரெண்டிங்கில் விஜய்யின் கோட் மற்றும் விஜய் சேதுபதியின் மகாராஜா என தமிழ் திரைப்படங்கள் முக்கியமான இடத்தை பிடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.