புத்தாண்டு ராசி பலன் 2025: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் – அதிர்ஷ்டம் யாருக்கு?

2025ஆம் ஆண்டில் ஆண்டு கோள்களான சனி, குரு, ராகு, கேது பெயர்ச்சி நிகழப்போகிறது. இந்த நான்கு கிரகங்களின் இடப்பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை பிறந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தப்போகிறது. 2025ஆம்…

NEW YEAR 2025 12

2025ஆம் ஆண்டில் ஆண்டு கோள்களான சனி, குரு, ராகு, கேது பெயர்ச்சி நிகழப்போகிறது. இந்த நான்கு கிரகங்களின் இடப்பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை பிறந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தப்போகிறது. 2025ஆம் ஆண்டில் மேஷம், ரிஷபம், மிதுனம், கடக ராசிகளில் பிறந்தவர்களுக்கு யாருக்கு அதிர்ஷ்டகரமான ஆண்டாக அமையப்போகிறது என்று பார்க்கலாம்.

மேஷம்:

வீரத்தின் அதிபதி செவ்வாய் பகவானை ராசி நாதனாகக் கொண்ட மேஷ ராசிக்காரர்களுக்கு 2025ஆம் ஆண்டு வருமானத்தை அதிகரிக்கக் கூடிய பொன்னான வாய்ப்புகளை வாரி வழங்கப்போகிறது. ஏழரை சனி தொடங்கினாலும் வாழ்க்கையில் ஏற்றம் பெறப்போகிறீர்கள். குரு பகவான் முயற்சிகளில் வெற்றியை தருவார். ராகு, கேது உங்களுக்கு தொழில் வியாபாரத்தில் லாபத்தை அள்ளித்தரப்போகின்றனர். செல்வ செழிப்பு நிறைந்த ஆண்டாக 2025ஆம் ஆண்டு அமையப்போகிறது.

ரிஷபம்:

காதல் நாயகன் சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்களுக்கு 2025ஆம் ஆண்டில் சனி பகவான் அள்ளித்தரப்போகிறார். பொருளாதார நிலை மேன்மையடையும். குரு பகவான் தன வருமானத்தை அதிகரிப்பார். குடும்ப வாழ்க்கையில் நிம்மதியும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். ராகுவின் பயணம் வெற்றியை தேடித்தரும். கேது பகவான் நினைத்த காரியத்தை நிறைவேற்றுவார். செல்வ வளம் நிறைந்த ஆண்டாக 2025ஆம் ஆண்டு ரிஷப ராசிக்காரர்களுக்கு அமையப்போகிறது.

மிதுனம்:

புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மிதுன ராசிக்காரர்களுக்கு பல ஆண்டுகளாகவே சோதனைகளை சந்தித்த உங்களுக்கு 2025ஆம் ஆண்டில் புதிய மாற்றங்களை சந்திக்கப்போகிறீர்கள். வெளிநாடு தொடர்பான வேலை வாய்ப்புகள் தேடி வரும். பத்தாம் வீட்டிற்கு வரப்போகும் சனிபகவானின் பயணம் உங்களுக்கு புதிய வருமானத்தை உருவாக்கிக் கொடுக்கும். ராகு கேதுவின் பயணம் 2025ஆம் ஆண்டில் வருமானத்தை வாரி வழங்கப்போகிறது. விரைய ஸ்தானத்தில் உள்ள குரு பகவான் ஜென்ம குருவாகவும், குடும்ப குருவாகவும் பயணம் செய்யப்போவதால் பணம் பல வழிகளிலும் தேடி வரப்போகிறது.

கடகம்:

சந்திரபகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கடக ராசிக்காரர்களுக்கு 2025ஆம் ஆண்டில் அஷ்டம சனி முடிவிற்கு வரப்போவதால் கஷ்டங்கள் நீங்கப்போகிறது. பாக்ய சனி வருமானத்தை பல வழிகளிலும் அள்ளித்தரப்போகிறார். உங்களின் நிதி நிலைமை உயரும். குருபகவான் ஆண்டு தொடக்கத்தில் லாப குருவாகவும், மத்தியில் விரைய குருவாகவும், இறுதியில் ஜென்ம குருவாகவும் பயணம் செய்யப்போவதால் தொட்டது துலங்கும் நினைத்தது நிறைவேறும். ராகுவும் கேதுவும் உங்கள் ராசிக்கு சாதகமற்ற நிலையில் பயணம் செய்யப்போவதால் பண விசயங்களில் கவனம் தேவை. வாக்கு கொடுத்து மாட்டிக்கொள்ளாதீர்கள்.